ரகசியம்! நம் வாழ்வை சுவாரஸ்யமாக வைத்துக்கொள்ள தூண்டுகிறது தானே. ஒருவர் நம்மிடம் ஒரு விஷயத்தை சொல்லவந்து, அதை தொடங்கிய நொடியில், அப்புறம் சொல்கிறேன் என சொல்லிவிட்டு சென்றால், நாம் மண்டையை பிய்த்துக்கொண்டு அவரை பின்தொடர்கிறோம் தானே. ரகசியங்கள் நிறைந்த நம் உலகில் சில உப்புசப்பில்லாத வாழ்வுகூட இனிகிறதல்லவா. ஆனால் பாராவின் நீலநகரம் அவ்வாறில்லை. அதில் அனைவரின் வாழ்வை அனைவரும் அறிவர். இதுவே இந்த அத்தியாயத்தில் வித்தியாசமாக இருந்தது.
கடந்த அத்தியாயத்தில் கோவிந்தசாமி நீலநகரவாசிகளின் பின்னால் இருக்கும் மூன்றாவது கண்ணை மட்டுமே கண்டு அதிர்ச்சி அடைந்தான். அப்போது சூனியன் கோவிந்தசாமியை நோக்கி கேட்பான். உனக்கு இதுதான் தெரிகிறதா, அந்த அருவருப்பான நெற்றி தெரிவதில்லையா? நீலநகரவாசிகள் அவ்வாறு சுற்றி திரிந்த போது அதிர்ச்சிக்கொள்ளாத கோவிந்தசாமி, தன் மனைவியும் நீலநிறவாசிகளை போல் மாறிவிட்டிருந்ததை கண்டபோது பெரும் கவலையுற்றது மனித குணத்தின் இயல்பு தன்மையை காட்டியது.
இந்த அத்தியாயத்தில் முற்றிலும் மாய உலகினில் வெவ்வேறான அதிர்ச்சியில் நம்மை மீளவிடாமல் கட்டிப்போட்டுவிட்டார் பாரா. பல விசயங்கள் இந்த அத்தியாயத்தில் சுவாரஸ்யமாக இருக்கிறது. அதிலும் அந்த குழம்பு. நிறைய படங்களில் அந்த குழம்பு மாதிரி காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும், பாராவின் எழுத்துநடையில் படிப்பதற்கு பல இடங்களில் வியப்பாகவும் அதே சமயம் சில இடங்களில் சிரிப்பாகவும் இருந்தது.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.