பார்ட்டிப்ப்பாட்டு

இன்று கல்கி தீபாவளி மலர் உள்வந்திருக்கிறது. அதில் கோகுலம் பக்கங்களில் ஒரு பக்கமாக வெளிவந்திருக்கிற எனது உலக இலக்கியக் குழந்தைப் பாடல் பின்வருமாறு:-

பட்டு வீட்டுத் தோட்டத்தில் பார்ட்டி தொடங்கும் அமர்க்களம்
எட்டு தோழர், தோழியர் ஏரோப்ளேனில் வந்தனர்.

மிஸ்டர் பீனும் நாடியும் மீசை டோரி மானுடன்
சிஸ்டர் டோரா புஜ்ஜியும் சிறகடித்து வந்தனர்.

குண்டுகாலி யாவுக்கு கோட்டு பேண்ட்டு மாட்டியே
நண்பன் சோட்டா பீமுடன் நல்ல சுக்கி நாட்டியம்

பார்பி பாட்டு பாடுறாள் பார்க்க வந்த கிமோனாச்சி
ஆர்வ மாக குதிக்கிறான் அங்குமிங்கும் அலைகிறான்

ஆட்டம் பாட்டம் கூத்தெல்லாம் அட்டகாச மாகவே
வீட்டுத் தோட்ட வெளியிலே விடியும் வரை நடக்குது

ஹட்டோரிக்குப் பசிக்குது தாமஸ் ட்ரெயினில் டிபனெல்லாம்
எப்போ வந்து சேருமோ ஏங்கித் தவித்து நிற்கிறான்.

வீதி மக்கள் யாவரும் வியந்து நின்று பார்க்கவே
பாதி இரவு தாண்டியும் பார்ட்டி ஜோராய் நடக்குது

பட்டுவுக்குப் பெருமிதம் பார்ட்டி வெற்றி என்பதால்;
சுட்டித் தோழர் யாவரும் சுற்றி நின்று வாழ்த்தினர்

டிவிக்குள்ளே வாழ்வது தினமும் போரடிப்பதால்
தாவி வந்தோம் ஊருக்கு தேங்ஸ் உனக்கு என்றனர்

வாசல்வரை வந்தபின் வழியனுப்பி நின்றபின்
ஆசையுடன் பட்டுவும் அங்குமிங்கும் பார்க்கிறாள்

தூக்கம் தொலைந்து போனது துரத்தும் ஹோம் ஒர்க் இருக்குது
ஏக்கமுடன் கனவையே எண்ணிப் பார்த்தாள் பட்டுஸ்ரீ.

கனவில் நடந்த தாயினும் காலம் முழுதும் நினைவிலே
இனிய பார்ட்டியாகவே இருக்குமென்று நினைக்கிறாள்!

(நன்றியாகப்பட்டது, கல்கி தீபாவளி மலருக்கு.)

8 comments on “பார்ட்டிப்ப்பாட்டு

 1. T.Mugesh

  Dear Sir,
  I am your long time fan , sir i am expect your updated version of OIL RAYGAI Book ,previous version
  not elaborately explain Indian oil politics ,so please write elaborated version of OIL RAYGAI
  its may create waves like NILAMALLAM RATHAM

  T.Mugesh
  (9444107920)

 2. Shankar

  ரெண்டு ‘ப்’-பன்னா! உங்ககிட்ட இருந்தா! இப்போ நீங்க எக்கச்சக்க பிஸின்னு ஒத்துக்கறேன் 🙂 😀

 3. writerpara Post author

  ஷங்கர், நீ இன்னும் கோயிந்தாக இருப்பது பற்றி மகிழ்கிறேன். ஒரு இப்பன்னாவும் வராது என்பதற்காகவே இரண்டு போட்டேன்.

 4. Shankar

  அடடா, இதுல இப்பிடி ஒரு பொடி வேறயா!

  – அன்றும், இன்றும், என்றும் கோயிந்தாகவே இருக்க விழையும் ஷங்கர் 🙂

 5. ராஷித் அஹமத்

  நான் சின்னப்பையனா இருந்தப்போ இந்தப்பாட்டெல்லாம் சுத்த தமிழில் அழகு தமிழில் கேட்டேன். படித்தேன். ஆனா பாருங்க இப்போ நீங்க எழுதிய தமிழ் பாட்டில் ஆங்கில வார்த்தைகளையும் இடையிடையே பயன்படுத்தியிருக்கிறீர்கள். இப்போ தமிழ் சினிமா பாடல்களில் அதிக அளவு ஆங்கில வார்த்தைகள் பயன் படுத்துகிறார்கள். அதன் தாக்கம் குழந்தைகள் பாடல் வரை எதிரொலிக்கிறது.

 6. லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

  அதே கல்கி தீபாவளி மலரில் என் ‘காமெடி எக்ஸ்பிரஸ்’ தொடரும் ஆரம்பித்திருப்பதை ஏன் இருட்டடிப்பு செய்தீர்? அந்த பாவத்தைக் களையும் விதத்தில் அது பற்றிய கட்டுரையும் ஒன்று எழுத உம்மைப் பணிக்கிறேன்!

Leave a Reply

Your email address will not be published.