இன்று கல்கி தீபாவளி மலர் உள்வந்திருக்கிறது. அதில் கோகுலம் பக்கங்களில் ஒரு பக்கமாக வெளிவந்திருக்கிற எனது உலக இலக்கியக் குழந்தைப் பாடல் பின்வருமாறு:- பட்டு வீட்டுத் தோட்டத்தில் பார்ட்டி தொடங்கும் அமர்க்களம் எட்டு தோழர், தோழியர் ஏரோப்ளேனில் வந்தனர். மிஸ்டர் பீனும் நாடியும் மீசை டோரி மானுடன் சிஸ்டர் டோரா புஜ்ஜியும் சிறகடித்து வந்தனர். குண்டுகாலி யாவுக்கு கோட்டு பேண்ட்டு மாட்டியே நண்பன் சோட்டா பீமுடன்...
ஆஸ்வல்டும் அதிசய மீனும்
மீன் வளர்க்கலாம் என்று ஆஸ்வல்ட் முடிவு செய்தது. வின்னிக்குப் பொழுதுபோவது கஷ்டமாக இருக்கிறது. வீட்டில் குட்டி மீனொன்று துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.
‘வா, வின்னி. நாம் மீன் வாங்கி வரலாம்’ என்று தன் செல்ல நாய்க்குட்டியை அழைத்துக்கொண்டு வளர்ப்பு மீன் கடைக்குப் போனது ஆஸ்வல்ட்.
காதலன், யுகேஜி-தேர்ட் க்ரூப்
'அப்பா, இந்த சீனிவாசன் ஏந்தான் இப்படி பண்றானோ தெரியல.’ ‘என்னடா கண்ணு பண்றான்?’ ‘இதுவரைக்கும் மூணுபேரை லவ் பண்ணிட்டான்.’ ‘யார் யாரு?’ ‘நித்யப்ரீதா, சம்யுக்தா, தீப்தி.’ ‘ஓ! பெரிய பிரச்னைதான்.’ ‘அவன் சம்யுக்தாவ லவ் பண்றது எனக்குப் பிடிக்கலை.’ ‘ஏண்டா செல்லம்?’ ‘அவ என் பெஸ்ட் ஃப்ரெண்ட்.’...