மழை வந்ததும் நீல நகர பிரஜைகளின் தலை முடிகள் நெட்டுக் குத்தாக நிற்க தொடங்குகின்றன. நம் நகரில் மழை வந்ததும் மண்டை சில்லிட்டு கவி எழுதத் தொடங்கிவிடும் கவிஞர்களைக் கலாய்க்கிறாரோ…
ஒருவேளை நீல நகரத்தில் இருப்பதைப் போல நமக்கும் தேவைக்கேற்றாற்போல் முகத்தை கழட்டி வைத்து மாற்றிக் கொள்ளும் வசதியிருந்தால் எப்படி இருக்கும்!!
ஆனாலும் உள்ளாடை மாற்றுவதைப் போல அடிக்கடி நாமும் நம் கொள்கைகளை மாற்றிக் கொண்டு தானே இருக்கிறோம். அதுவும் நம் முகத்தை மாற்றிக் கொள்வதற்கு சமம் தானென்பதை தான் குறிப்பிடுவதாய் கருதுகிறேன்.
“தொண்ணூறுகளில் பிறந்து எழுபதுகளில் இறந்தவர். அவதூறு இலக்கிய அவதூதர்.” – யாராய் இருக்கும்???
கோடிஸ்வரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பங்கேற்பாளரைப் போல் மண்டை காய விடுகிறீர்கள் பா.ரா. “விவாதங்களின் பரமபிதா. எந்தத் துறை சார்ந்த விவாதம் நடந்தாலும் மூச்சு விடாமல் இரண்டு மணி நேரம் பொழியக் கூடியவர்” – இவரையும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
கோவிந்தசாமி வேறு முகத்துடன் வெண்பலகையில் எழுத தொடங்கியிருக்கிறான்.