வழக்குரைஞர் ‘ஷில்பா’ என்ற புதிய கதைமாந்தர் வெளிப்பட்டுள்ளார். இவர் கோவிந்தசாமிக்குப் பலவகையில் உதவுவார் என்ற நம்பிக்கையை வாசகர்கள் அடைந்துள்ளனர். ஆனால், இவர் கோவிந்தசாமியின் மனைவியின் தோழி என்பதுதான் வருத்தமான செய்தி.
கோவிந்தசாமிக்கும் அவரின் மனைவிக்கு விவாகரத்து என்ற தகவலையும் சூனியனைக் கைதுசெய்ய மற்றொரு சூனியன் வந்திருக்கும் தகவலும் ஷில்பாவின் வழியாகவே தெரியவருகிறது.
அதுமட்டுமல்ல கோவிந்தசாமியை நீலநகரத்தின் குடிமகனாக்கும் பெரும்பணியினை ஷில்பாவே ஏற்கிறாள். ஆனால், அதில் கோவிந்தசாமி தோல்வியை அடைகிறார்.
காரணம், சூனியன் கோவிந்தசாமியின் நிழலை முன்னிருத்தி முன்பே கோவிந்தசாமியின் பெயரில் நீலநகரத்தின் குடியுரிமையைப் பெற்றுவிட்டதால், கோவிந்தசாமி நீலநகரத்தின் மொழியை அறிந்த பின்பும் அந்த நகரத்தின் குடியுரிமையைப் பெறமுடியாமல் தவிக்கிறான்.
கோவிந்தசாமிக்குத்தான் எத்தனை எத்தனை இடர்கள். அவனோடு சேர்ந்து வாசகரும் தடுமாறித்தான் நிற்கின்றனர்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.