அனுபவம்

கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 11)

சூனியனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பணியையும் அவன் அதைச் சரிவர நிறைவேற்றாமைக்கான காரணத்தையும் அதனால் அவன் பெற்ற தண்டனையும் இந்த அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளன. கடவுளுக்கு எதிரான போராட்டத்தில் சூனியன் அடைந்த தோல்வியே அவனைத் தலைமறைவாக்கியுள்ளது.
அரசியின் வருகையும் அதற்காக நகரமாந்தர்களைக் கட்டுப்படுத்த காவலர்கள் மேற்கொள்ளும் முயற்சியும் சூனியன் அரசியைக் கொலைசெய்ய முயற்சிசெய்யும் விதமும் நன்றாகக் காட்டப்பட்டுள்ளன.
பெண்களின் வாய்மொழியின் வழியாகவே ரகசியங்கள் எளிதாகக் கசிந்துவிடுகின்றன என்பதை எழுத்தாளர் காட்டியுள்ளார். ‘பெண்களிடம் எந்த ரகசியத்தையும் கூறக் கூடாது’ என்ற கருத்தையும் இந்த அத்தியாயத்தில் எழுத்தாளர் உறுதிப்படுத்தியுள்ளார். எழுத்தாளரின் இந்தக் கருத்துக்குப் பெண்கள் எந்த வகையில் எதிர்வினையாற்றுவார்கள் என்று தெரியவில்லை.
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி