அனுபவம்

கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 12)

சாகரிகாவின் தோழியான ஷில்பாவை சந்தித்த கோவிந்தசாமி சாகரிகா தன்னுடன் திரும்பி வந்து வாழவோ அல்லது குறைந்தபட்சம் அவன் மீது தவறில்லை என்பதை நிரூபிக்கவாவது ஷில்பாவின் உதவியைக் கோருவதே இந்த அத்தியாயம்.
“உனக்கு சாவே கிடையாது என்று இறுதி வரை நம்பிக்கை அளிப்பார்கள். பிறகு RIP சொல்லி விடுவார்கள்” – இக்கொடூர சூழலில் இவ்வரிகளை வாசிக்கையில் ஏனோ ஒரு வருத்தம் உள்ளுக்குள் சூழ்ந்தது.
கதை இப்போது தான் சூடு பிடித்துள்ளது. கோவிந்தசாமியின் நிழல் சூனியனோடு சென்று நீல நகரத்தின் குடியுரிமைப் பெற்றுள்ளது. கோவிந்தசாமி ஷில்பாவுடன் வந்து பெற்றுள்ளான். வெண்பலகை கோவிந்தசாமியின் பதிவு எண்ணை ஏற்க மறுக்கிறது. ஷில்பா ஆளை விட்டால் போதுமென்று நகர்ந்து விடுகிறாள். அடுத்து?
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி