நீங்கள் அறியாதது ஒன்றுமில்லை. முகநூலில் ஒரு பெண் பெயர் கொண்ட ஐடி ஒரு நிலைத் தகவலைப் பதிவிட்டால் எவ்வளவு விருப்பக்குறிகள் (likes), கருத்துகள் (comments) வரும். இன்னும் ஒரு படி மேலாய், அதனோடு தன் புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டால்? இதே, ஓர் ஆண் ஒரு தகவலைப் பதிவிட்டால்??? அதே கதை தான் நீல நகரத்தில் மக்கள் தங்கள் தகவல்களைப் பகிரும் வெண்பலகைக்கும்.
போன அத்தியாயத்தில் விட்ட குறையை சொல்ல மறந்தோமே. நாம் அறிந்தது தான். கூடுதலாய், பொதுவாகவே இறப்புகளை குறைத்துக் காட்டும் அரசின், அதிகாரிகளையும் ஒற்றை வரியில் வெளிப்படுத்தியுள்ளார்.
சூனியன் தன் கிரகத்திலிருந்து ஏன் மரண தண்டனை விதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டான் என்பதை இவ்வத்தியாயத்தில் கூறுகிறான்.
முகநூலில் – இல்லை இல்லை, வெண்பலகையில் கோவிந்தசாமியின் நிழலுக்காக சூனியன் எழுதியதற்கு அடுத்து என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்..