அனுபவம்

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 47)

மலருடன் செல்லும் கோவிந்தசாமியை சூனியன் சந்திக்கிறான். அவனை எவ்வாறெல்லாம் மனவலிமை குன்றச் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்கிறான்.
சாகரிகா ஒரு திமுக அபிமானி என்றும் அவன் கொஞ்சிக் குலாவிய இரண்டு பேரில் ஒருத்தி தமிழ்த் தேசியத் தாரகை என்றும் இன்னொருத்தி நக்சல்பாரி என்றும் சொல்கிறான்.
கோவிந்தசாமியின் இந்துத்துவ நம்பிக்கையும் சாகரிகாவின் மீது கொண்டிருக்கும் காதலும் ஒன்றுதான் என்கிறான்.
“உன் மனைவிக்கு திராவிடம் ஒரு துப்பட்டா, உனக்கு தேசியம் ஒரு ஜட்டி. இரண்டையும் மாட்டிவிட்டவன் நான். நீங்கள் வெறும் கதாபாத்திரங்களே” என்கிறான்.
அவனை மண்வாரித் தூற்றிவிட்டு ஓடி விடுகிறான் கோவிந்தசாமி. தனது கதையில் அடுத்து என்னவெல்லாம் தான் திட்டமிட்டு வைத்திருக்கிறேன் என உரைக்கிறான் சூனியன். அடுத்தது என்ன? பொறுத்திருப்போம்.
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி