ஷில்பாவின் யோசனைப்படி கோவிந்தசாமி நீலவனத்தில் ஒரு சமஸ்தானம் அமைத்து அதன் மூலம் சாகரிகாவைக் கவர அனைத்து ஏற்பாடுகளும் செய்கிறான். சூனியனின் வார்த்தைகள் அவனை உறுத்திக்கொண்டிருந்தாலும் அதில் சலனமுற்று அவன் தான் வந்த வேலையை தவறவிட தயாராய் இல்லை.
சாகரிகாவைக் கண்டு அவளிடம் அந்த நீலவனத்து மந்திரமலரை கொடுத்து தன் மனதிலுள்ள காதலை வெளிப்படுத்தும் செயல் ஒன்றே அவன் மனதை முழுமையாய் ஆட்கொண்டிருக்கிறது.
கோவிந்தசாமிக்கு சமஸ்தான ஐடியாவைக் கொடுத்ததற்காக ஷில்பாவை கோபிக்கிறாள் சாகரிகா . அவள் கோவிந்தசாமியின் நிழலின் மூலம் அவனைக் கொலை செய்ய ஏற்பாடு செய்திருக்கிறாள். நிழலிடம் இருந்து நல்ல செய்தியை எதிர்பார்த்து காத்திருக்கிறாள்.
சாகரிகா தான் உருவாக்கிய கதாபாத்திரம் என்கிறாள் ஷில்பா. கோவிந்தசாமி, சாகரிகா உட்பட அனைவருமே தன் கதாபாத்திரம் என்கிறான் சூனியன். இதுவரை கதையில் நேரடியாய் வராமல் மற்றவர்கள் மூலமாக பேசப்படும் பா.ரா. யாருடைய கதாபாத்திரம்? இவர்கள் அனைவருமே அவருடைய கதாபாத்திரங்கள் அல்லவா? கதையின் போக்கில் இணைந்து பதில்களுக்கு காத்திருப்போம்.