இது இறுதிக்கு முந்தைய அத்தியாயம் என்ற அந்த கடைசி வரிதான் என்னை ஒருதரம் கதை முழுதையும் ஒருமுறை ரீவைண்ட் செய்துபார்க்கத் தூண்டியது.
அதுதான் சூனியனையும் அவ்வாறு செய்யத் தூண்டி இருக்கலாம்.
பூகம்பச் சங்குடன் தான் பயணித்த விண்கலனை பாதுகாப்பதாகச் சொல்லி பாசாங்கு செய்து நீல நகரத்தில் குதிக்கும் சூனியன், நகரத்தில் நுழைவதற்கு கோவிந்தசாமியை பயன்படுத்திக்கொள்கிறான்.
அதற்கு பிரதிபலனாக அவனுக்கு உதவ முன்வருகிறான் சூனியன். கோவிந்தசாமியின் நிழலை தனியே அழைத்துக் கொண்டு அவனது மனைவி சாகரிகாவை தேடிப் போகும் சூனியன் மட்டுமல்ல கோவிந்தசாமியின் நிழல் கூட அவனுக்கு எதிராக திரும்புகிறது.
கோவிந்தசாமி ஒரு முட்டாளாகவே இருக்கிறான். சித்தாந்த ரீதியில் மட்டுமல்ல மனதளவிலும் அவனும் அவன் மனைவியும் எதிரெதிர் துருவங்கள்.
கதையின் நாயகன் என்பது இதில் வரும் குறியீடுகள்தாம். எண்ணற்ற குறியீடுகள் இதில் உண்டு. உச்ச அத்தியாயத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.