கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 50)

நான் சற்றும் எதிர்பாராத முடிவு. நான் மட்டுமல்ல, யாரும் இப்படி ஒரு முடிவை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
முடிவை விடுங்கள். இந்த அத்தியாயம் தொடங்கியதில் இருந்தே ஜெட் வேகத்தில் பயணிக்கிறது. கதையில் யாரெல்லாம் மிகவும் புத்திசாலியாக இருந்தார்களோ அவர்களெல்லாம் முட்டாள்களாகளாக்கப் படுகிறார்கள். எனில் முழு முட்டாள் கோவிந்தசாமி? அவன்தான் அனைவரையும் முட்டாளாக்கிவிட்டு கதையோடு தன் வாழ்வை முடிக்கிறான். ஆனால் அவன் மறைந்தபின்னும் கதை முடியவில்லை. இன்னொரு கதைக்கான தொடக்கமாக முடிவு இருக்கிறது.
கடைசிவரை கதையில் வராமலே வெளியில் இருந்து கொண்டு கதாபாத்திரங்கள் வழியாக மட்டுமே வந்துவிட்டுப் போகிறார் பா.ரா. அவர் மனுஷ்யபுத்திரனையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
குறியீடுகள் புரியாதவர்க்கு கதை புரிந்திருக்க நியாயமில்லை. இப்போது குறியீடுகளில் முதன்மையானவற்றை பா.ரா. வெளிப்படுத்திவிட்டார். இப்போது யாருக்கும் புரியாமல் இருக்காது.
நிறைவான கதையைப் படித்த மனநிறைவோடு முடிக்கிறேன். ஆம்.
கதையோடு பயணித்த என் ஐம்பது மதிப்புரைகளும் இத்துடன் முடிகிறது.
Share

Add comment

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி