மனிதன் செயல்களை செய்யவே படைக்கப்பட்டிருப்பவன். அவனளவில் அவன் செயல்கள் சரியானதே என நினைத்திருப்பவன். அவன் செயல்களால் சிலசமயம் யாராகிலும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். ஆனால் மனிதமனம் தன் செய்கையால் தான் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என ஏற்க மறுக்கும்.
மனிதனுக்கே இப்படி எனில் பாதிப்பை தருவதையே கடமையாக கொண்ட சூனியனின் செயலில் குற்றம் கூறினால்,..?
சூனியனின் உள்ளக்கொதிப்பை விளக்கும் ஆசிரியர், சூனியனுக்கு ஏற்பட்ட அவமானத்தையும் எலும்புக்கப்பல் மூலம் கூறுகிறார். எலும்புகளுக்கு சூனியர் உலகுக்கு உள்ள கிராக்கியை விவரித்து சூனியன் பயணப்படும் கப்பல் துரோகிகளின் எலும்புகள் என்கையில் சூனியன் குறுகினாளென்றால் “துரோகிகளின் நியாயத்தை எந்த உலகமும் ஏற்பதில்லை” என்று ஒருவன் கூறுவது சூனியர்களுக்கு வாலி தரும் பனிகத்தியின் வீச்சுக்கு நிகரானது.
பனிக்கத்தியின் வீச்சுக்கும், மீகாமனின் பேச்சுக்கும் ஆளான சூனியன் தப்பிக்க திண்ணம் கொள்கையில் நீலநகரம் எதிர்வர விபத்துக்கான சூழல் ஏற்படுவது சூனியனின் அதிர்ஷ்டமா, புதிய சிக்கலா…
தொடந்து வாசிப்போம்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.