கபடவேடதாரி எனும் தலைப்பை அறிவிக்கையில் Mr.சம்பத், நான் அவனில்லை போல் ஏமாற்றுக்காரனின் கதையாயிருக்கும் என நினைத்தேன். ஏமாந்து போனேன்.
சூனியனிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. அதுவே ஒரு வித்தியாசமெனில், சூனியனுக்கு விசாரணை, தண்டனை என நினைத்தற்கரிய கோணத்தில் கதை ஆரம்பத்திலேயே வேகமெடுக்கிறது.
ஆங்கில திரைப்படங்களில், கதைகளில் Parallel universe என்ற concept சுவாரசியமாக இருக்கும்.
அது போன்ற புது உலகை நம் கண்முன் படைத்திருக்கிறார் . சூனியனுக்கு இடப்பட்ட கட்டளை அறிந்தாலும் அவர் என்ன தவறிழைத்தார் என்பது இன்னும் விளக்கப்படவில்லை என்றே கருதவேண்டியிருக்கிறது. மேலும் நியாயக்கோமான் யூதாஸிடம். (இந்த சூனியர்கள் உலகுக்கு நியாயக்கோமானாக யூதாஸ் அமர்ந்திருப்பது ஏகப்பொருத்தம். )
கர்த்தரோ, கிருஷ்ணரோ.. சூனியர்களின் பார்வையில் எதிர்மறையாகவே இருப்பர் என்பதையும் தூவிச்சேன்றிருக்கிறார் ஆசிரியர்.
நிலக்கடலை ஓட்டுச்சிறை, சனிக்கோள்.. என காட்சிகள் கண்முன் விரிய வைக்கும் எழுத்து.
நியாயக்கோமான்கள் வரிசையாக தன் தரப்பு நியாயத்தை ஏற்காத நிலையில் என்ன செய்யப்போகிறான் சூனியன்?
தொடர்ந்து படிப்போம்….
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.