அதிமுக்கிய அறிவிப்பு

என்னுடைய புதிய புத்தகம் ‘குற்றியலுலகம்’ இன்று அச்சாகி வந்துவிட்டது. சென்னை புத்தகக் கண்காட்சியில் மதி நிலையம் அரங்கில் (இடப்புறமிருந்து முதல் வரிசை – கடை எண் 18-19) இது விற்பனைக்குக் கிடைக்கிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் நான் ட்விட்டரில் எழுதியவற்றுள் எனக்குப் பிடித்த ட்வீட்களை இதில் தொகுத்திருக்கிறேன். இனி இது ஒரு மாதத்தில் ஒன்பது லட்சம் பிரதிகள் விற்க வேண்டிய பொறுப்பு வாசகர்களாகிய உங்களைச் சேர்ந்தது.

இந்நூலின் தனிச்சிறப்பு என்பது, தமிழன் வாங்கக்கூடிய சகாய விலையில் இது வெளிவந்திருப்பது. (ரூ. 40) வாசிக்கவும் நன்றாக இருக்கும் என்பது இரண்டாம் தனிச்சிறப்பு என்பதைச் சொல்லத் தேவையில்லை. இதில் அரசியல், கலை, இலக்கியம், சமூகம், சரித்திரம், சாப்பாடு, சங்கீதம், சினிமா, தொலைக்காட்சி, விளையாட்டு, சாராயம் உள்ளிட்ட சகலவிதமான நூதனாதி விஷயங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. உலகிலேயே இத்தனை பல்வேறுதரப்பட்ட சங்கதிகளை ஒரே நூலில் விவாதிப்பதென்பது இதுவே முதல் முறை என்பது வாசகப் பெருமக்களுக்குத் தெரியும் என்பதால் அது குறித்துப் பெரிதாகப் பிரஸ்தாபிக்க விரும்பவில்லை.

மேற்கண்ட புகைப்படத்தில், குற்றியலுலகம் நூல் வெளியாகிவிட்ட தகவலை எடுத்துக்காட்டி அறிவிப்பவர், என் நண்பர் பார்த்தசாரதி.

நாளை கண்காட்சிக்குச் செல்ல உத்தேசிக்கிறேன் என்பது உபரித் தகவல்.

11 comments on “அதிமுக்கிய அறிவிப்பு

 1. அப்பு

  புத்தகத்தில் இருக்கும் அந்த கவர்ச்சிப் படத்தையும் போடுமாறு கேட்டுக் கொள்கிறேன். – அந்தப் படத்தின் இரசிகனின் அன்பு வேண்டுகோள். அப்புறம் பாருங்கள் ஒன்பது இலட்சம் ஒன்பது நாட்களில் விற்றுத் தீரும்!

 2. R.Manivannan

  Sure will buy the book tomorrow,this is the challenging number all my good wishes to achieve the same.

 3. S. Krishnamoorthy

  கடந்த ஆண்டு பேயோன்.
  இந்த ஆண்டு பாரா.
  புத்தகச் சந்தையில் வாங்கி முழுவதும் இருமுறை படித்து விட்டேன்.
  வெண்பாம்-நான் மிகவும் ரசித்த பகுதி. குறும்பா (இடக்கரடக்கல்)என்றும் சொல்லலாம்.
  கிருஷ்ணமூர்த்தி

 4. M.S.Devarajan

  பொன்னியின் செல்வன் நான் இதுவரைக்கும் படித்ததில்லை… ஒரே confuse ஆகுது … எந்த வெளியீடு பெஸ்ட்னு சொல்லுங்க சார்… உங்களுக்கு புண்ணியமா போகும்…..
  Thank U…

 5. hari

  ponniyin selvan padikaatheerkal, ungallukku punniyam koodum
  puthiya puthahangal niraiya undu neer padikka @m.s.devarajan

Leave a Reply

Your email address will not be published.