வாசகர்களின் வசதி அல்லது இம்சைக்காக இந்தத் தளத்தில் சில புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நீங்களே சற்று அப்படி இப்படிக் கண்ணை நகர்த்தினால் தென்பட்டுவிடும் என்றாலும் எடுத்துச் சொல்லவேண்டியது என் கடமை.
முதலாவது ட்விட்டர் பக்கம். ட்விட்டரில் நான் எழுதும் குறுவரிகள் இந்தப் பக்கத்தில் தானாகச் சேகரமாகும். மொத்தமுள்ள ஆறாயிரத்து சொச்சம் ட்விட்களையும்கூட இங்கே கொண்டுவந்துவிடலாம். பக்கம் தொங்கிவிட்டால் என்னாவது என்று இப்போதைக்குக் கடைசி 200 ட்விட்கள் மட்டும் இருக்கும். மேற்கொண்டு அங்கே எழுத எழுத இங்கே அப்டேட் ஆகும். ட்விட்டர் பக்கம் போகாதவர்கள் இங்கே படித்துக்கொள்ளலாம். ஹெட்டர் நாவிகேஷன் பாரில் இந்தப் பக்கம் நிரந்தரமாக இருக்கும்.
அடுத்தது பிரத்தியேக கூகுள் சர்ச் வசதி. இந்தத் தளத்தில் நீங்கள் எதையும் தேடிப்பெற வசதியாக வலப்புறம் தரப்பட்டுள்ளது. தேடும் விஷயம் இன்னொரு பக்கத்தில் திறக்காமல் தேடல் பெட்டியின் அடியிலேயே உடனுக்குடன் தெரியும்படி செய்திருக்கிறேன். அழித்துவிட்டு மீண்டும் தேட, பெட்டியின் அருகிலேயே ஒரு இண்ட்டு மார்க் உள்ளது.
மூன்றாவதும் முக்கியமானதுமான புதுச்சேர்க்கை, மின்னஞ்சலில் கட்டுரைகளை வாசிப்பதற்கான வசதி. இது பல காலமாக நண்பர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்த விஷயம். வலப்புறம் உள்ள மின்னஞ்சல் பெட்டியில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை அளித்து, ஃபீட் பர்னர் மூலமாக அஞ்சலில் முழுதாக வாசிக்கலாம். இதில் ஒரே ஒரு பிரச்னை உண்டு. அவ்வப்போது தளத்தின் தோற்றத்தில் நான் செய்யும் அழகான [ஆம். அழகான.] மாற்றங்களை, பதிவாக அல்லாமல் பக்கவாட்டுப் பிரதேசங்களில் வெளியிடும் அறிவிப்புகளை நீங்கள் தவறவிடலாம்.
அதனால் ஒன்றும் குடி முழுகிவிடாது. வந்தடைய வேண்டிய செய்திகள் எப்படியும் வந்து சேரும். ஒருவேளை வராது போனால் அது அத்தனை முக்கியமான செய்தியல்ல என்று முடிவு செய்துகொள்ளுங்கள்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.
எம்மைப் போல் கூகுள் ரீடர் வழியே உங்கள் பதிவுகளைப் படிப்பவர்க்குத் தாங்கள் இந்தப் பதிவில் காட்டிய ‘பாரா’முகம் மென்மையாகக் கண்டிக்கத் தக்கது.
கிரி: கூகுள் ரீடரில் படிப்பது சிரமமில்லையே? தளத்தின் அடியில் எப்போதும் பஜ்ரங்தள் ஃபீட் லிங்க் இருக்குமே?
அதெல்லாம் சரி. ஊதாக் காக்கா எங்க சார்??????????
நீகா எ?
நான் சிவசேனா ஃபீட் லிங்க் மூலம்தான் படிக்கிறேன். நான் கேட்கவந்தது, ஒன்றாவது, இரண்டாவது, மூன்றாவது என உங்கள் தளத்திற்கு வந்து படிப்பவர்களுக்குச் செய்த வசதிகளை ரீடரில் படிப்பவர்களுக்குச் செய்யவில்லையே என்றுதான்…
#வருத்தம்