பாரா-ட்டு

ஆண்டுதோறும் நெய்வேலி புத்தகக் கண்காட்சியில், சிறந்த எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து, பாராட்டி விருதளித்து கௌரவிப்பது வழக்கம். இந்த ஆண்டு அந்தச் சிறப்பை எனக்கு அளித்திருக்கிறார்கள்.

ஜூலை 8, 2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு கண்காட்சி வளாகத்தில் உள்ள லிக்னைட் ஹாலில் இந்தப் பாராட்டு விழா நடைபெறவிருக்கிறது. [ஜூலை மாதம் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.]

நெய்வேலி – சுற்று வட்டாரங்களில் வசிக்கக்கூடிய வாசகர்களை விழாவுக்கு அன்புடன் அழைக்கிறேன்.

22 comments on “பாரா-ட்டு

 1. writerpara Post author

  வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. ஒரே ஒரு விஷயம். வாழ்த்துகள்தான். வாழ்த்துக்கள் இல்லை.

 2. Shriram

  மனமார்ந்த “வாழ்த்துகள்”….பாரா சார், நீங்கள் நல்ல எழுத்தாளர் மட்டும்ல்ல, நல்ல ஆசானும் கூட…

 3. யதுபாலா

  பாராட்டுக்கள்….அதென்ன நெய்வேலி சுற்றி உள்ளவர்கள் மட்டும்..??நானும் உங்கள் சமீபத்திய வாசகந்தான்..!!2008-ல் ”சுப்பிரமணியபுரம்” பார்க்க தவறிவிட்டீர்கள்…?இப்பொழுது…!!!! {-__-}.

 4. ஒருவாசகன்

  வாழ்த்துகள் பாரா….

  //ஒரே ஒரு விஷயம். வாழ்த்துகள்தான். வாழ்த்துக்கள் இல்லை.//

  எனக்கு நீண்ட நாளாக ஒரு சந்தேகம் “நன்றிகள்” என்று ஒரு சொல் உண்டா? அல்லது நன்றி மட்டும்தானா?

  BTW:
  நீகா எ?

 5. writerpara Post author

  @ ஒருவாசகன்:

  நன்றி போதும். நன்றியை சரக்கடிக்க வைக்கவே வேண்டாம். அப்புறம், நீலக்காகம். நீங்களும் எத்தனையோ முறை கேட்டுவிட்டீர்கள். நான் என்ன செய்ய? கதையெழுதும் மனநிலை கூடவில்லை. எழுதி வைத்த அத்தியாயத்தையே இன்னும் எடிட் செய்யாமல் இருக்கிறேன். இப்படி விழுந்து விழுந்து கேட்கிற வாசகர்கள் இருக்கும்போது எழுத்தாளன் இப்படி மூடில் மாட்டி அவதியுறுவது எம்பெருமான் திருவிளையாடலே அல்லாமல் வேறல்ல. கொஞ்சநாள் அவகாசம் கொடுங்கள். சரியாகிவிடுவேன்.

 6. writerpara Post author

  @பாபா:

  உம் ப்ரொஃபைல் போட்டோ அளவுக்காவது கமெண்ட் இருக்கலாம் என்பது என் தாழ்மையான அபிப்.

 7. writerpara Post author

  யதுபாலா: அவசியம் வாருங்கள். நெய்வேலியில் சந்தித்துப் பேசுவோம். அன்று முழுதும் அங்கேதான் இருப்பேன்.

Leave a Reply

Your email address will not be published.