யதி – வாசகர் பார்வை 8 [டாக்டர் வாசுதேவன்]

பாராவின் யதியை ஆரம்பத்தில் இருந்து படித்து வந்தேன். கொஞ்சம் ஆன்மிக நாட்டம் இருந்ததால், இது பத்தி என்ன எழுதப்போகிறார் என்று ஒரு ஆவல் இருந்தது. நிறைய விஷயங்கள் புதிதாகத் தெரியவந்தன. ஆரம்ப காலத்தில ட்விட்டர்ல இவர் போட்ட லிங்கை தேடிப்போய் தினமணி இணைய பதிப்பில் படிச்சு ஆஹா, ஓஹோ, அப்பறம் போன்ற கருத்தாழமிக்க கமெண்ட்ஸ் போட்டுக்கொண்டு இருந்தேன். அப்பறம் கதை உள்ள இழுத்து, கமெண்ட் போடுவதை நிறுத்திட்டேன்.

பிரபஞ்சம் மிகவும் பெரியது. என்ன வேணும்னாலும் நடக்கும். இல்லைன்னு சொல்ல முடியாது. இவர் விவரிச்சு இருக்கற பல விஷயங்கள் நடக்க முடியாதுன்னு தோணினாலும் சாத்தியமே.

நிறையவே ரிசர்ச் பண்ணி இருக்கார். கடைசில நான் டாக்டர்ன்னு பாத்து என்ன டாக்டர்ன்னு விசாரிச்சு ஒரு சந்தேகம் கேட்டார். அந்த விஷயத்துல என்ன எழுதி இருந்தாலும் யாரும் கேள்வி கேட்கப்போறதில்லை. இருந்தாலும் இவருக்கு அது சரியா இருக்கணும் போலிருக்கு. ஷீஷாய்ட் பர்சனாலிட்டியோ என்னவோ!

கதை திருப்பித் திருப்பி முன்னேயும் பின்னேயும் போய் போய் வந்தது எனக்குக் கொஞ்சம் ஆயாசத்தைக் கொடுத்தது. வயசாச்சா? எனக்குத்தான்.  அந்த காரணத்தால் கீப்பிங் ட்ராக் கொஞ்சம் கஷ்டமா இருந்தது.

சிகைக்காய் பொடி டப்பாவில் போட்டு வைத்த ரோஜாப்பூ வாசனை ன்னு எல்லாம் …..  சாஆஆர்! இதெல்லாம் டூ மச்.

ஓடிப்போன நாலுமே உருப்படலை. ஒவ்வொண்ணும் ஒரு திசை. விஜய் ராஜ யோகத்தில சித்தனா ஆனாலும் அது அல்டிமேட் இல்லை. ஒரு இடை நிலையே. வினய் பாவம். நிறையவே அலைக்கழிப்பு. தந்த்ரீகம் மாந்திரீகம்ன்னு போறதில இருக்கிற பிரச்சினைகள். கத்தி விளிம்புல நடக்கற மாதிரி சமாசாரம். நிறையவே பிரச்சினைகள். விமல் போலக் குழப்பவாதி இருக்கவே முடியாது. ஒரு பக்கம் என்ன நடக்கறதோ அது பத்தி கவலை இல்லைன்னு சொன்னாலும் இன்னொரு பக்கம் கள்ளப்பணம், ஆயுதக் கடத்தல், கொலைன்னு.. எங்கெங்கயோ போறான். சரிப்பட்டு வரலை. மனம் போன போக்கில போறவர் எங்கே உருப்படியா போக முடியும்? எங்கேயும் போகத் தேவையில்லைன்னுதான் பாரா கிட்டேருந்து பதில் வரும் போலிருக்கு! மூணாவது பையன் மட்டும் பக்தில மூழ்கியாச்சு. மெதுவா கரை சேந்துடுவான்.

எந்த ஜன்மத்திலும் கிடைச்ச ப்ராக்ரஸ் நல்லதுதான். இந்த ஜன்மத்தில கரை சேராட்டாலும் அடுத்த ஜன்மங்களில் விட்ட இடத்திலேந்து ஜீவன் தொடரும். அந்த வகையில் கிடைச்ச ப்ராக்ரஸ் நல்லதேன்னு விட்டுடலாம்.

நிறைய கேள்விகள், லூஸ் எண்ட்ஸ் இருந்தாலும்… மொத்தத்தில் நல்ல நாவல்! வாழ்த்துகள்.

டாக்டர் வாசுதேவன் திருமூர்த்தி [@drtvasudevan]

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter