வலைப்பதிவாளர்களுக்குச் சிறுகதைப் போட்டி

என் நண்பர் சிவராமன் (வலையுலகில் பைத்தியக்காரன் என்றால் தெரியும்.) சமீபத்தில் ‘உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு’ சார்பில் வலைப்பதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி ஒன்றைத் தமது வலைப்பதிவில் அறிவித்திருக்கிறார்.

இந்த இயக்கத்தில் அல்லது அமைப்பில் யார் யார் இருக்கிறார்கள், என்ன செய்யப்போகிறார்கள் என்று எதுவும் எனக்குத் தெரியாது. சிவராமனைத் தெரியும், அவரது ஆர்வங்கள் தெரியும், அக்கறை தெரியும் என்பதால் இந்தப் போட்டி பற்றிய தகவலை இங்கே தருகிறேன்.

வலைப்பதிவாளர்கள் மட்டுமே இதில் கலந்துகொள்ளலாம். ஆயிரம் சொற்களுக்கு மிகாத சிறுகதை வேண்டும். சிறந்த இருபது சிறுகதைகளுக்குத் தலா ரூ. 1,500 பரிசு. கடைசித் தேதி ஜூன் 30. அனுப்பவேண்டிய முகவரி: sivaraman71@gmail.com

போட்டி குறித்தும் ‘உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு’ குறித்தும் விரிவாக அறிய சிவராமனின் இந்தப் பதிவினை வாசிக்கலாம்.

உரையாடல் இயக்கத்துக்கு, அதன் முயற்சிகளுக்கு என் வாழ்த்து.

Share

1 comment

 • நன்றி பாரா.

  எதிர்பார்க்கவேயில்லை. எப்படியும் எனது முயற்சிக்கு நீங்கள் ஆதரவு தெரிவிப்பீர்கள் என்று தெரியும். ஆனால், இவ்வளவு விரைவில் எதிர்பார்க்கவில்லை.

  அப்புறம், ‘உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பில்’ யாருமே இல்லை அல்லது அனைவருமே இருக்கிறார்கள் 🙂

  என்ன செய்யப் போகிறோம்?

  வாங்க உட்கார்ந்து பேசலாம்…

  தோழமையுடன்
  பைத்தியக்காரன்

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter