ஒரு ஊரில் ஒரு பெண் பேய் இருந்தது. அது இன்னும் இறக்காத ஒரு பையனைக் காதலித்தது. எப்படியாவது அவனைத் திருமணம் செய்துகொள்ள விரும்பி, இறந்த தன் தந்தைப் பேயிடம் சொல்லி இன்னும் இறக்காத தாயைப் போய் வரன் பேசச் சொல்லிக் கேட்டது.
தந்தைப் பேய் தன் பழைய மனைவியின் கனவில் சென்று விவரத்தைச் சொல்லி, ‘நம் ஒரே மகளின் ஆசையை அன்றே நிறைவேற்றி வைத்திருந்தால் அவள் பேயாகியிருக்கவே மாட்டாள்; இப்போதாவது அவள் ஆசைப்படுவதை நடத்திவைக்க ஆவன செய்’ என்று சொன்னார்.
மறுநாள் அந்தப் பெண் பேயின் தாயார், அந்தப் பையனின் வீட்டுக்குப் போனாள். பையனும் அவன் பெற்றோரும் அவளை வரவேற்று, என்ன விஷயம் என்று கேட்டார்கள்.
‘காலாகாலத்துல புள்ளைக்கு ஒரு கால்கட்டு போட்டு வைங்க. எதாச்சும் ஓடுகாலி காத்துக் கருப்பு அடிச்சிரப் போவுது.’ என்று சொல்லிவிட்டுப் போனாள்.