பா.ராகவன் தினமலரில் தொடராக எழுதி பரவலான கவனிப்பைப் பெற்ற பொலிக பொலிக தொடர் தற்போது நூலாக வெளிவருகிறது.
தினமும் பாரா எழுத எழுத அச்சுக்குச் செல்லும் முன்பே படித்த வெகு சிலருள் நானும் ஒருவன். இதை எழுதும் நாள்களில் பாரா ஒருவித மோன நிலையில் இருந்தார் என்பதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்தேன். சில நாள்களில் தொடர்ச்சியாக பத்து அத்தியாயங்கள் எழுதுவார். சில நாள் ஒன்றும் ஓடாது. திடீரென்று பித்துப் பிடித்தது போல் மீண்டும் எழுதுவார். இதற்கான பலன், தினமலரில் தொடரை வாசித்துவிட்டு அவருக்கு வந்த கடிதங்களில் தெரிந்தது. பலர் தொடர்ச்சியாக இத்தொடரைப் படித்தார்கள். தீவிர சில வைஷ்ணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இந்நூல் பற்றிய மாற்றுக் கருத்துகளும் இருந்தன.
ஒரு நூல் இந்த அளவுக்காவது மாற்றுக் கருத்துகளைத் தோற்றுவிக்காவிட்டால்தான் அதில் எதோ பிரச்சினை என்று பொருள்.
ராமானுஜரை மிக எளிமையான, சுவாரஸ்யமான தமிழில் தெரிந்துகொள்ள சிறந்த நூல் பாரா எழுதியது. மிகக் குறைந்த விலையில் முன்பதிவுக்குக் கிடைக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
325 ரூ மதிப்புள்ள இந்நூல் சலுகை விலையாக ரூ 200 மட்டுமே.
முன்பதிவு செய்யவும் மேலதிக விவரங்களைப் பார்க்கவும் இங்கே செல்லவும்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.