Categoryபொலிக! பொலிக!

துறையும் மொழியும்

அன்புள்ள பாரா, டாலர் தேசம், மாயவலை, ஆயில் ரேகை போன்ற புத்தகங்கள் வழியேதான் நீங்கள் எனக்கு அறிமுகமானீர்கள். இதைப் போன்ற கனமான விஷயங்களைத் தமிழில் எளிமையாக எழுதவும் ஒரு ஆள் இருக்கிறாரே என்று உங்களுடைய ஒவ்வொரு புத்தகத்தைப் படிக்கும்போதும் வியந்து போயிருக்கிறேன். அன்சைஸ் படித்தபோது, இந்த மனிதர் இப்படியும் சிரிக்க சிரிக்க எழுதுகிறாரே என்று வியப்படைந்தேன். டாலர் தேசத்திலேயே உங்கள் நக்கல் பரிச்சயம்...

தூவிய விதைகள் – அரவிந்தன் நீலகண்டன்

ஸ்ரீ ராமானுஜர், பாரதத்தின் ஆன்மிக – பண்பாட்டு நிலப் பரப்பில் ஒரு மாபெரும் சிகரம். அதன் முடியை நம் போன்ற எளியோரால் எண்ணியும் பார்க்க முடியாது. அப்படி எண்ணிப் பார்க்கும்தோறும் அது மாபெரும் வியப்பையும் அவர் அடிதொழும் பக்தி உணர்வையும் மட்டுமே உருவாக்கும். அவர் நம் தட்சிண பாரதத்தைச் சார்ந்தவர். அதுவும் தமிழ் மண்ணைச் சார்ந்தவர் என்பது தமிழர்களாகிய நமக்கு மிகப் பெரிய பாக்கியம். ஆனால்...

பொலிக பொலிக முன்பதிவு – ஹரன் பிரசன்னா

பா.ராகவன் தினமலரில் தொடராக எழுதி பரவலான கவனிப்பைப் பெற்ற பொலிக பொலிக தொடர் தற்போது நூலாக வெளிவருகிறது. தினமும் பாரா எழுத எழுத அச்சுக்குச் செல்லும் முன்பே படித்த வெகு சிலருள் நானும் ஒருவன். இதை எழுதும் நாள்களில் பாரா ஒருவித மோன நிலையில் இருந்தார் என்பதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்தேன். சில நாள்களில் தொடர்ச்சியாக பத்து அத்தியாயங்கள் எழுதுவார். சில நாள் ஒன்றும் ஓடாது. திடீரென்று பித்துப் பிடித்தது...

மிஞ்சும் சொற்கள்

பொலிக பொலிக என்பது நம்மாழ்வாரின் மந்திரச் சொல். கி.பி. 1017ல் பிறக்கப் போகிற ராமானுஜருக்குக் கலி யுகம் தொடங்கியபோதே கட்டியம் கூறியவர் அவர். ராமானுஜர் பிறந்து ஆயிரம் ஆண்டுகள் இன்று நிறைவடைகின்றன. இன்றும் பொலிந்துகொண்டிருக்கிறது அந்த ஞானப்பெருஞ்சுடர். கடந்த நூற்றியெட்டு தினங்களாக இந்தத் தொடரின்மூலம் ராமானுஜரின் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்களைக் கொண்டு அவரை நெருங்கிப் புரிந்துகொள்ள ஒரு சிறு...

பொலிக! பொலிக! 108

எல்லாம் சரியாக உள்ளதாகவே பட்டது. சீடர்கள் அனைவரும் வந்து சேர்ந்துவிட்டிருந்தார்கள். அரங்க நகர்வாசிகள் அத்தனை பேரும் சேரன் மடத்தின் வெளியே குவிந்திருந்தார்கள். யாரும் விரும்பாத ஒரு சம்பவம் நடந்துவிடத்தான் போகிறதென்ற, அறிந்த துயரத்தின் சுவடுகள் அவர்கள் முகமெங்கும் நிறைந்திருந்தன. ‘சுவாமி, நீங்கள் இல்லாமல் நாங்கள் எப்படி உயிருடன் இருப்போம்? இருத்தல் என்பதே சுமையாகிவிடாதா?’ கண்ணீரோடு கேட்ட சீடர்களைக்...

பொலிக! பொலிக! 107

சமுத்திரத்தின் அடியாழத்தில் இருந்து எழுந்து மேலேறி வந்து உதித்த ஒரு பெரும் வெண்சங்கமேபோல் வீற்றிருந்தார் ராமானுஜர். முதுமையின் தளர்ச்சி மீறிய மினுமினுப்பொன்று எப்போதும் அவரிடம் உண்டு. கொஞ்சம் ஆஜானுபாகுவான தோற்றம்தான். அமர்ந்திருக்கும்போதும் நிற்பது போலத்தான் இருக்கும். சலிப்பின்றிச் சொற்பொழிவாற்றிக்கொண்டே இருக்கும்போது சட்டென்று கண்மூடி கணப் பொழுது எதிலோ லயித்து நின்றுவிடுகிற வழக்கம் உண்டு...

அடுத்தது…

எங்கள் தொலைக்காட்சி உலகில் ஒரு வழக்கமுண்டு. மதியம் சாப்பாடு ஆனதும் புரொடக்‌ஷன் ஆள் ஒருவர் சாப்பிட்ட அனைவருக்கும் ஒரு துண்டு கடலை பர்பி கொடுத்துக்கொண்டே போவார். இது அனைத்து யூனிட்டுகளிலும் நடக்கும். சினிமா உலகிலும் இவ்வழக்கம் இருக்கிறதென்று கேள்விப்பட்டிருக்கிறேன். நேரில் கண்டதில்லை. உண்ட வாய்க்கு வெற்றிலை பாக்குக்கு பதில் வேர்க்கடலை பர்பி. அந்த இனிப்பு வாயெங்கும் பரவி, அடித்தொண்டையை நனைத்து உள்ளே...

பொலிக! பொலிக! 106

அமைதி. ராமானுஜர் கண் மூடி வெகுநேரம் யோசித்துக்கொண்டே இருந்தார். கந்தாடையாண்டான் காத்திருந்தார். மடத்தில் இருந்த சீடர்கள், உடையவர் என்ன சொல்லப் போகிறார் என்று அறிய சுற்றி வந்து சூழ்ந்து நின்றார்கள். ஶ்ரீபெரும்புதூர் அவர் பிறந்த மண். அந்தத் தலத்தில் உடையவரின் திருமேனிச் சிலையொன்று நிறுவ நினைப்பது நியாயமே. பதிமூன்று ஆண்டுக்காலம் வாழ்ந்துவிட்டுக் கிளம்பிய திருநாராயணபுரத்துக்குத் தனது திருமேனியைச்...

பொலிக! பொலிக! 105

ஶ்ரீபெரும்புதூரில் இருந்து கந்தாடையாண்டான் வந்திருந்தார். முதலியாண்டானின் புதல்வர். வயது அளித்த தளர்ச்சியால் இனி திருவரங்கத்தைவிட்டு எங்கும் போக முடியாது என்று தெரிந்தபின் வெளியூர் தொடர்புகளையெல்லாம் அவர்மூலம்தான் ராமானுஜர் கவனித்துக்கொண்டிருந்தார். குறிப்பாக, காஞ்சியிலும் ஶ்ரீபெரும்புதூரிலும் நடக்கிற விவரங்களையெல்லாம் அவர்தான் அடிக்கடி வந்து சொல்லுவார். தேசம் முழுவதிலும் இருந்து சீடர்களும்...

பொலிக! பொலிக! 104

நின்று சுழலும் புவியும், நில்லாது ஓடும் காலமும் கணப் பொழுது உறைந்து மீண்டாற்போலிருந்தது. தடதடத்து ரதம் ஓடும் அகண்ட பெரும் வீதியில் ராமானுஜரும் கூரேசரும் ஒருவரையொருவர் நேரில் சந்தித்தபோது பரவசக் கண்ணீரைத் தவிர இருவரிடமும் ஏதும் இருக்கவில்லை. ‘சுவாமி..!’ என்று பாதம் பணிய வந்த கூரேசரை அப்படியே அள்ளி அணைத்துக்கொண்டார் ராமானுஜர். ‘இதுவோ விதி? இதுவோ உம் சேவைக்குப் பரமன் அளித்த பரிசு? ஞானச் சுடரொளி...

பொலிக! பொலிக! 103

பொங்கிப் பெருக்கெடுத்த காவிரியின் கரையோரம் மற்றொரு நதிப்பெருக்கே போல் திரண்டிருந்தது ஜனக்கூட்டம். கோயில் அத்தியாபகர்கள் ஒருபுறம் திருவாய்மொழி சொல்லிக்கொண்டிருந்தார்கள். மறுபுறம் திருக்கோயில் மாலை மரியாதைகளுடனும் தீர்த்தப் பிரசாதங்களுடனும் அர்ச்சகர்கள் காத்திருந்தார்கள். எப்போது வருவார், எப்போது வருவார் என்று ஆண்களும் பெண்களும் கண்ணெட்டிய தூரங்களில் பார்த்துப் பார்த்துத் தவித்துக்கொண்டிருந்தார்கள்...

பொலிக! பொலிக! 102

‘சுவாமி, நான் சொன்னதற்கு இன்னும் பதிலே சொல்லவில்லையே? சோழன் போய்ச் சேர்ந்துவிட்ட தகவல் எப்படியும் எம்பெருமானாருக்குத் தெரிந்திருக்கும். இந்நேரம் அவர் கிளம்ப ஆயத்தமாகியிருப்பார். தாமதிக்காமல் தாங்களும் குடும்பத்தோடு திருவரங்கம் புறப்படுவதே எனக்குச் சரியென்று படுகிறது!’ என்றார் சிறியாண்டான். கூரேசர் பதில் சொல்லவில்லை. அமைதியாக யோசித்துக்கொண்டிருந்தார். அடுக்களையில் சமையலை முடித்துவிட்டு மெல்ல...

பொலிக! பொலிக! 101

ஹேவிளம்பி வருடத்தின் சித்திரை பிறந்தது. அன்று சனிக்கிழமை. வளர்பிறை திரயோதசி. ஹொய்சள தேசமே விளக்கொளியிலும் மங்கல வாத்திய அணிவகுப்புகளிலும் வாண வேடிக்கைகளிலும் ஒளிர்ந்துகொண்டிருந்தது. பஞ்ச நாராயணர்களின் கோயில்களிலும் ஒரே முகூர்த்தத்தில் விக்கிரகப் பிரதிஷ்டைக்குத் திட்டமிட்டிருந்தார் ராமானுஜர். பொறுப்பு முதலியாண்டானிடம் தரப்பட்டிருந்தது. முன்னதாக அதற்குச் சில தினங்களுக்கு முன்புதான் ராமானுஜருக்கு...

பொலிக! பொலிக! 100

செய்தி திருநாராயணபுரத்துக்கு வந்து சேர்ந்தபோது, ராமானுஜரின் மடத்துக்கு விஷ்ணுவர்த்தனும் அவனது மகள் வகுளாவும் வந்திருந்தார்கள். ஹொய்சள தேசம் அதுகாறும் கண்டிராத வகையில் எம்பெருமான் ஶ்ரீமன் நாராயணனுக்கு ஐந்து பெரும் கோயில்கள் கட்டும் திருப்பணியில் ஈடுபட்டிருந்தான் விஷ்ணுவர்த்தன். வகுளாதான் வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்துகொண்டிருந்தாள். தொண்டனூரில் ஒரு கோயில். அது நம்பி நாராயணம். தலக்காட்டில்...

பொலிக! பொலிக! 99

பிரம்மனின் முதல் நான்கு படைப்புகளுள் ஒருவரான சனத்குமாரர் பூமிக்கு வந்தபோது கால் பதித்த இடம் அது. கிருத யுகத்தில் அந்த மலையடிவாரத்தில் அவர் நாராயணனைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் அம்மலைக்கு அன்று நாராயணாத்ரி என்று பெயர். திரேதா யுகத்தில் நான்கு வேதபுருஷர்களையும் நான்கு சீடர்களாக வரித்துக்கொண்டு அங்கே வந்து வாசம் செய்தார் தத்தாத்ரேயர். மாபெரும் யோகி. அவர் அமர்ந்த இடத்தின் அருகிருந்த நீர்நிலை...

பொலிக! பொலிக! 98

ஊர் திரண்டுவிட்டது. மன்னன் விஷ்ணுவர்த்தன் தனது முழுப் பரிவாரங்களுடன் முன்னால் வந்து நின்றான். இங்கே உடையவர். அங்கே அவர் நியமித்த சிம்மாசனாதிபதிகள். தவிரவும் கோயில் கைங்கர்யத்துக்கெனப் பிரத்தியேகமாக அவர் அமர்த்தியிருந்த ஐம்பத்தி இரண்டு பேர் கொண்ட நிர்வாகக் குழு. சீடர்களும் பக்தர்களும் முண்டியடித்தார்கள். ராமானுஜர் அமைதியாகப் பேச ஆரம்பித்தார். ‘மனிதர்களில் வேற்றுமை பார்ப்பதே மகாபாவம். இதில்...

பொலிக! பொலிக! 97

‘ஆம். நீங்கள் சொல்லுவது சரி. இந்தப் பகுதியில் ஒரு பெரும் படையெடுப்பு நிகழ்ந்தது. வருடங்கள் ஆகிவிட்டாலும் அதன் வடுக்கள் மறையவேயில்லை. திருநாராயணப் பெருமாளின் உற்சவ மூர்த்தி மட்டுமல்ல. பிராந்தியத்தில் உள்ள பல கோயில்களில் இருந்தும் விக்கிரகங்களை டெல்லீசன் கவர்ந்து சென்றுவிட்டான்!’ என்று வருத்தத்துடன் பேசினான் விஷ்ணுவர்த்தன். உடையவர் புன்னகை செய்தார். ‘அப்பனே, முகமதிய மன்னனை டெல்லியின் ஈசனாக்கிக்...

ஒரு விளக்கம்

ட்விட்டரில் நண்பர் அலெக்ஸ் பாண்டியன் ஒரு வினாவை எழுப்பியிருந்தார். ராமானுஜரின் காலம் கிபி 1017 – 1137. டெல்லியில் சுல்தான்கள் ஆட்சிக்கு வந்தது, 1192ல். அப்படி இருக்க, 1101-1104 காலக்கட்டத்தில் ராமானுஜர் எந்த டெல்லி சுல்தானைச் சந்தித்திருக்க முடியும்? [ சுட்டி இங்கே] ராமானுஜர் டெல்லி சென்ற சம்பவத்தை விவரிக்கும்போது எனக்கும் இச்சந்தேகம் வந்தது. ராமானுஜர் டெல்லிக்குச் சென்றதாகச் சொல்லப்படும்...

பொலிக! பொலிக! 96

யாதவாசலம் என்று அந்தக் குன்றுக்குப் பெயர். யதுகிரி என்றும் சொல்லுவார்கள். சட்டென்று அங்கே கிளம்பிப் போகவேண்டும் என்று ராமானுஜர் சொன்னபோது மன்னன் விஷ்ணுவர்த்தனுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘அது பெரும் காடாயிற்றே. இங்கிருந்து சென்றடையவே பல நாள் பிடிக்குமே சுவாமி?’ ‘அதனால் பரவாயில்லை மன்னா. வைணவர்கள் திருமண் காப்பின்றி இருக்கக்கூடாது. பரமாத்மாவான ஶ்ரீமன் நாராயணனின் பாதங்களைக் குறிப்பது அது. மண்ணிலேயே...

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Recent Posts

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி