ராமானுஜர்-1000

துறையும் மொழியும்

அன்புள்ள பாரா,

டாலர் தேசம், மாயவலை, ஆயில் ரேகை போன்ற புத்தகங்கள் வழியேதான் நீங்கள் எனக்கு அறிமுகமானீர்கள். இதைப் போன்ற கனமான விஷயங்களைத் தமிழில் எளிமையாக எழுதவும் ஒரு ஆள் இருக்கிறாரே என்று உங்களுடைய ஒவ்வொரு புத்தகத்தைப் படிக்கும்போதும் வியந்து போயிருக்கிறேன். அன்சைஸ் படித்தபோது, இந்த மனிதர் இப்படியும் சிரிக்க சிரிக்க எழுதுகிறாரே என்று வியப்படைந்தேன். டாலர் தேசத்திலேயே உங்கள் நக்கல் பரிச்சயம் என்பதால் அதனைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் பொலிக பொலிக நிச்சயம் நான் எதிர்பார்க்காத ஒன்று. நீங்கள் இதற்குமுன் ஆன்மீகம் எழுதியிருக்கிறீர்களா? இந்தப் புத்தகத்தில் உள்ள மொழி உங்களுடைய மற்றப் புத்தகங்களில் இல்லவேயில்லை. இதை எழுதியது உண்மையிலேயே நீங்கள்தானா?

ஆ. குமரகுரு, துவாக்குடி

ORead More »துறையும் மொழியும்

தூவிய விதைகள் – அரவிந்தன் நீலகண்டன்

ஸ்ரீ ராமானுஜர், பாரதத்தின் ஆன்மிக பண்பாட்டு நிலப் பரப்பில் ஒரு மாபெரும் சிகரம். அதன் முடியை நம் போன்ற எளியோரால் எண்ணியும் பார்க்க முடியாது. அப்படி எண்ணிப் பார்க்கும்தோறும் அது மாபெரும் வியப்பையும் அவர் அடிதொழும் பக்தி உணர்வையும் மட்டுமே உருவாக்கும். அவர் நம் தட்சிண பாரதத்தைச் சார்ந்தவர். அதுவும் தமிழ் மண்ணைச் சார்ந்தவர் என்பது தமிழர்களாகிய நமக்கு மிகப் பெரிய பாக்கியம். ஆனால் தமிழ்நாட்டுக்கு இத்தனை பெருமை இருப்பதைப் பார்த்து வரலாற்று நங்கை திருஷ்டிப் பொட்டு வைத்துவிட்டாள். கடந்த ஒரு நூற்றாண்டாக, ஆண்டுக்கு ஆண்டு நம் புண்ணிய மரபு அடுத்தடுத்த தலைமுறைகளுக்குப் போய்ச் சேர்வதில் ஒரு தொய்வு ஏற்பட்டுவிட்டது. குறிப்பாக ஸ்ரீ வைணவம் எனும் ஞான கங்கை அனைத்துத் தமிழர்களையும் சென்றடைவதில் ஒரு தேக்கம் ஏற்பட்டுவிட்டது.
Read More »தூவிய விதைகள் – அரவிந்தன் நீலகண்டன்

பொலிக பொலிக முன்பதிவு – ஹரன் பிரசன்னா

பா.ராகவன் தினமலரில் தொடராக எழுதி பரவலான கவனிப்பைப் பெற்ற பொலிக பொலிக தொடர் தற்போது நூலாக வெளிவருகிறது. தினமும் பாரா எழுத எழுத அச்சுக்குச் செல்லும் முன்பே படித்த வெகு சிலருள் நானும் ஒருவன். இதை எழுதும் நாள்களில் பாரா ஒருவித மோன நிலையில் இருந்தார் என்பதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்தேன். சில நாள்களில் தொடர்ச்சியாக… Read More »பொலிக பொலிக முன்பதிவு – ஹரன் பிரசன்னா

மிஞ்சும் சொற்கள்

பொலிக பொலிக என்பது நம்மாழ்வாரின் மந்திரச் சொல். கி.பி. 1017ல் பிறக்கப் போகிற ராமானுஜருக்குக் கலி யுகம் தொடங்கியபோதே கட்டியம் கூறியவர் அவர். ராமானுஜர் பிறந்து ஆயிரம் ஆண்டுகள் இன்று நிறைவடைகின்றன. இன்றும் பொலிந்துகொண்டிருக்கிறது அந்த ஞானப்பெருஞ்சுடர்.

கடந்த நூற்றியெட்டு தினங்களாக இந்தத் தொடரின்மூலம் ராமானுஜரின் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்களைக் கொண்டு அவரை நெருங்கிப் புரிந்துகொள்ள ஒரு சிறு முயற்சி செய்தோம். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் தனது இருப்புக்கும் தேவைக்கும் நியாயம் உணர்த்துகிற வாழ்க்கை என்பது வெகு அபூர்வமானது. பெரியோரைப் பணிவோம். அது பெருமானைப் பணிவதினும் பெரிது.Read More »மிஞ்சும் சொற்கள்