
எண்ணெய் எடுக்கிறார்கள்
எரிவாயு எடுக்கிறார்கள்
கனிமங்கள் தனிமங்கள் சேர்மங்கள்
ஏராளமாக எடுக்கிறார்கள்
பார் பார்
நீருக்கடியில் தடம் விரித்து
புல்லட் ரயில் விடுகிறார்கள்
உற்றுப் பார்
உவர் நீரை நன்நீராக மாற்றிக்
குடிக்கக் கொடுக்கும் திட்டம்
சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது
நம் மாநிலத்திலேயே.
ஒன்றுமில்லாவிட்டாலும் அள்ளிக்கொள்ள
எப்போதும் உள்ளது உப்பும் மீன்களும் முத்தும்.
எடுக்கப் போனால் எதையாவது கொடுப்பது
இயற்கையின் குணம்
ஒரு புகைப்படம் எடுத்துப் போடுவதற்காக
அதற்கு பூஜை போட்டுத் தாஜா செய்ய
அவசியமில்லை.
O
அவர் துவாரகைக்கு தியானம் செய்யப் போகிறார்.
அவர்கள் வாசுகியின் படிமங்களை ஆய்வில்
கண்டெடுக்கிறார்கள்.
ஆழ்துளை அறிஞர்களால்
முடியாதது ஒன்றுமில்லை
இனி
சாகசம் என்பது
ஆழங்களின் வழியே
அதலங்களை அடைவது
அறிவியல் நினைவாலயங்களுக்கு
அதுவே சிறந்த இடம்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.