எண்ணெய் எடுக்கிறார்கள் எரிவாயு எடுக்கிறார்கள் கனிமங்கள் தனிமங்கள் சேர்மங்கள் ஏராளமாக எடுக்கிறார்கள் பார் பார் நீருக்கடியில் தடம் விரித்து புல்லட் ரயில் விடுகிறார்கள் உற்றுப் பார் உவர் நீரை நன்நீராக மாற்றிக் குடிக்கக் கொடுக்கும் திட்டம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது நம் மாநிலத்திலேயே. ஒன்றுமில்லாவிட்டாலும் அள்ளிக்கொள்ள எப்போதும் உள்ளது உப்பும் மீன்களும் முத்தும். எடுக்கப் போனால் எதையாவது கொடுப்பது...
சாலைக் கவிதை
எல்லா சாலைகளிலும் ஏதோ பணி நடக்கிறது எல்லா சாலைகளையும் ஒருவழி ஆக்கியிருக்கிறார்கள் எல்லா சாலைகளிலும் பாதி தொலைவில் பாதை மாற்றி விடுகிறார்கள் போக வேண்டிய இடத்துக்கு நேரெதிர் திசையில் நெடுந்தூரம் சுற்றிக்காட்டிவிட்டு எல்லா சாலைகளும் எங்காவது கொண்டு சேர்த்துவிடுகின்றன முடிவற்ற பெருஞ்சுவராக நீளும் நீலத் தகடுகள் எல்லா சாலைகளையும் இரண்டாகப் பிளக்கின்றன தகடுக்கு மறுபுறம் ஆட்கள் வேலை செய்கிறார்கள்...
பொதுவெளி
பொதுவெளியில் அரசியல் பேசாதே.
பொதுவெளியில் கவிதை எழுதாதே.
பொதுவெளியில் இலக்கியம் எடுபடாது.
பொதுவெளியில் தனிப்பட்ட தகவல்கள் கூடாது.
பொதுவெளியில் சண்டை போடாதே.
பொதுவில் எது சார்ந்தும் கருத்து சொல்லாதே.
பொதுவெளியில் அமைதியாக இரு.
பொதுவெளியில் நல்லவனாக மட்டும் இரு.
நீ செத்தால் RIP போட
பொதுவெளியின் புனிதத்தைப்
பேணிக்காப்பது உன் கடமை.
காணாதிருத்தல்
புத்தக அடுக்கின் நடுவே ஏதோ ஒன்று உருவப்பட்டு காணாமல் போயிருக்கிறது நானே எடுத்திருப்பேன் அல்லது யாராவது. ஒற்றைப் பல்லிழந்த கிழவியின் புன்னகைபோல் ஈயென்று இளிக்கிறது புத்தக அடுக்கு காணாமலான புத்தகம் எதுவாக இருக்கும் யோசனையில் கழிகிறது பொழுது அவசரத்துக்கு எடுப்பதையெல்லாம் வாரமொருமுறை அடுக்கிவிடுவேன் அவ்வப்போது புரட்டுவதை அப்போதைக்கப்போதே வைத்துவிடுவேன் எனக்குத் தெரியாமல் என் அறைக்கு வருவோர் இல்லை...
10
ஓவியா அழுதிருக்கிறாள் கோவிந்து வந்திருக்கிறார் எப்போதுமில்லா வழக்கமாக எங்களூர் ஏடிஎம்மில் பணம் இருந்திருக்கிறது தக்காளி விலை ஏறி ராயப்பேட்டை புத்தகக் காட்சியில் விற்பனை சரிந்திருக்கிறது விஜய் சேதுபதிக்கு இன்னொரு நல்லபடம் பாதாம் நூறென்றால் கிராமா நம்பரா நேற்றும் குழுமத்தில் கேட்டிருக்கிறார் யாரோ ஒருவர் குறும்பட இயக்குநர் கைதாகி சமூகப் பொதுவெளியில் பிரபலமாகியிருக்கிறார் ஆந்திரத்தில் கஞ்சா கடத்தல்...
தொலைந்த காதை
தூங்கி எழுந்து பார்த்தபோது ஒரு காதைக் காணவில்லை பதறித் தேடி வீடு முழுதும் கலைத்துப் போட்டேன் படுக்கையில் பார்த்தாயா என்றாள் மனைவி மடித்து வைத்ததை உதறிப் பார்த்தால் காது அதில் இல்லை காலை இருந்தது வாக்கிங் போகையில் குடைந்த நினைவிருக்கிறது குளிக்கும்போது தேய்த்துக் குளிக்க நினைத்து சோம்பலில் செய்யாமல் விட்டது நினைவிருக்கிறது குளித்து முடித்து ஈரம் துடைக்கையில் காதின் பின்புறம் ஒரு கட்டி வரப்போகும்...
பல்லி விழாப் பலன்
பல்லியொன்று மேலே படுத்துக் கிடந்தது நகரும் வழியாகக் காணோம் உஸ் உஸ்ஸென்று சத்தமெழுப்பிப் பார்த்தேன்; ம்ஹும். ஹேய், போவென்று எழுந்து கையாட்டிப் பார்த்தேன் அது காது கேளாத பல்லி தட்டித் துரத்த தடியேதும் அருகில் இல்லை தானே நகரவும் அதற்கு வழி தெரியவில்லை எந்தக் கணம் தவறி விழும் என்ற அச்சத்தில் டாய்லெட் சரியாகப் போகவில்லை பல்லிவிழும் பலனில் உச்சந்தலைக்கு நல்லதாக ஏதுமில்லை பாதியில் எழ வழியின்றி மீதியை...