ஜனவரி சென்னை புத்தகக் கண்காட்சியில் என்னுடைய சிறுகதைகளின் தொகுப்பொன்றைக் கொண்டுவரலாம் என்று நினைத்தேன். நான் சிறுகதை எழுதி நாளாகிவிட்டது. ஆனால் இப்போதும் அவ்வப்போது யாராவது பழைய கதைகளைக் குறிப்பிட்டோ, புத்தகம் கேட்டோ எழுதுகிறார்கள். இன்று ஒளிப்பாம்புகள் எங்கே கிடைக்கும் என்று ஒரு நண்பர் மின்னஞ்சலில் கேட்டிருந்தார்.
மொத்தமாக இதுவரை எழுதியவற்றைத் தொகுத்து ஒரே புத்தகமாக்கலாம் என்று தோன்றியது. ஆனால் பல கதைகள் என் கைவசம் இல்லை. குறிப்பாக குமுதத்தில், ஜங்ஷனில், குமுதம் காலத்துக்குப் பிறகு பிற பத்திரிகைகளில் எழுதியவற்றை சேகரிக்காது இருந்துவிட்டேன்.
காந்தி சிலைக் கதைகள் வரை இருக்கிறது. அதன்பின் எழுதிய பல கதைகளை எங்கே போய்த் தேடுவது என்று தெரியவில்லை. பேப்பரில் எழுதிய காலம்.
நண்பர்கள் யாரிடமாவது அவர்களது சேகரத்தில் எனது சிறுகதைகள் ஏதேனும் (புத்தகமாக வந்தவை போக மற்றவை) இருக்குமானால் அனுப்பி உதவ வேண்டுகிறேன். இந்த உதவி செய்வோருக்கு நூல் வரும்போது அன்பின் அடையாளமாக ஒரு பிரதி அனுப்பப் பதிப்பாளர் தயாராக இருக்கிறார்.
இதனுடன் கூட தற்சமயம் பதிப்பில் இல்லாத புவியிலோரிடம், அலை உறங்கும் கடல், மெல்லினம் ஆகிய நாவல்களும் ஜனவரியில் மறு பிரசுரம் காண்கின்றன என்ற தகவல் ஒருவேளை ஒரு சிலருக்கு மகிழ்ச்சியும் வேறு சிலபலருக்குக் கலவரமும் தரலாம்.
ஆமாமா,அன்புப் பிரதியைப் பதிப்பாளர் நிச்சயம் அனுப்பிவிடுவார், அவருடைய ஏராளமான பணிகளுக்கு நடுவே நினைவிருக்கும்பட்சத்தில், மனமிருக்கும்பட்சத்தில் :>
Wow