ஒரு கதை எழுதியிருக்கிறேன் என்று என் மகள் (வயது 7) ஒரு தாளை நீட்டினாள். ஏற்கெனவே சொல்லப்பட்ட கதைதான். ஆயினும் மொழி அவளுடையது.
கீழே அவள் எழுதிய வர்ஷன். வாக்கிய அமைப்பு, ஒற்றுகள் எதையும் மாற்றவில்லை. டைப் செய்தது மட்டுமே என் பணி.
O
ஒரு நாள் யசோதா வெண்ணெய் கடையும்போது அங்கே கண்ணன் வந்தான்.
வெண்ணெய் கண்ட அவனுக்குப் பசி எடுக்கத் தொடங்கியது. தனது அம்மாவைக் கட்டிப்பிடித்து சொன்னான். அம்மா பானைக்குள் என்ன இருக்கிறது? எனக் கேட்டான்.
பானைக்குள் பூதம் இருக்கிறது என்றாள் அவன் அம்மா.
கண்ணன் பானைக்குள் பார்த்தான். அப்போது யசோதை, வேண்டாம் கண்ணா வேண்டாம். பூதம் உன்னைக் கடித்துவிடும். ஓடிப் போ. என்றாள் யசோதை. நான் உன்னை விட்டுப் போகமாட்டேன் என்றான் கண்ணன். போய்விட்டால் அது உன்னைக் கடித்துவிடுமே. என்றான் கண்ணன்.
யசோதை அவனிடம் மன்னிப்பு கேட்டாள்.
Pulikku piranthathu poonaiyaakumaa… nice story
வாழ்த்துக்கள், 7 வயதிலும் நடையும், கருத்தும், அமைப்பும் அலாதியாக அமைத்திருக்கிறார். எல்லாம் உங்கள் ரோல்மாடலின் விளைவே! இனிதாகட்டும் அவருக்கும் நாளை!
7 வயசுல எழுதினமாதிரி தெரியல… நன்றாக உள்ளது.
உங்கவீடுலையே உங்களுக்கு போட்டி !!! எளிமையாகவும் பொருள் நிறைத்ததாகவும் உள்ளது pls கிவ் ஹர் டு மை லவ் அண்ட் ஹக்ஸ்
புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பது எல்லோருக்குமே தெரியுமே.
இவங்க தான் உங்க வீட்டு கனிமொழியா????
இதே போல் எனது தங்கை மகள் பாட்டி வடை சுட்ட கதை கூறினால். நான் காக்காட்ட நரி வடிய ஏமாத்தி வாங்கிட்டு போய்டுச்சே அதுபாவம்தானே என்றேன். அவள் சொன்னால் ” இல்லை அதுவும் பாட்டிகிட்டேர்ந்துதாநீ தூக்கிட்டு வந்துச்சுன்னு”
How sweet ! Tons of luv for the kid…
“ஆவின்”
ரொம்ப நாளுக்கு அப்புறம் நடந்த கதை ::
ஒரு நாள் பூதம் வெண்ணெய் கடையும்போது அங்கே யசோதை வந்தாள்.
“கண்ணா ! பானைக்குள் என்ன இருக்கிறது?” எனக் கேட்டாள்.
“பானைக்குள் கண்ணன் இருக்கிறான்” என்றது பூதம்
யசோதை பானைக்குள் பார்த்தாள். அங்கே பூதம் இருந்தது.
விக்கித்து போன அவள் மேலே பார்க்க அங்கே யசோதா
அவளைப்பார்த்து சொனாள்:
“வேண்டாம் கண்ணா வேண்டாம். பூதம் உன்னைக் கடித்துவிடும். ஓடிப் போ”
பிறகு யசோதா கண்ணன் பூதம் ஆகிய மூவரும் அப்பாவிடம் மன்னிப்பு கேட்டனர்.
=================================================================
ஒன்றுமில்லை..இதே கதையை எழுத்தாளர் பேயோன் மகள் எழுதியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என ஒரு [விபரீத] கற்பனை.
அன்பின் பா.ரா,
வீட்டிலிருந்தே சரியான போட்டி! வாழ்த்துக்கள்.(இருவருக்கும்)
“புலியின்குட்டி 16அடி பாயட்டும்” வாழ்த்துக்கள்
Ayya Para Avargalee, Ponnu Nalla concept soulluthu , appathan kuthu paattu ku poyeetaru
as some body told earlier ” Nallathoor veenai seithee aathai nalam keeda poozuthiyel yerivathudoo” – yellam ghandhi ( paacha note) paduthum paadu – Looking forward our old Para – Sankaran Bangalore
ரைட்டர் சார்… சென்னை புத்தக விழாவில் உங்களை பின்னுக்கு தள்ளி புத்தகங்கள் வாங்கும் போதே தெரிந்தது.பாப்பா முன்னுக்கு வருவது.
அண்ணனின் வாழ்த்துக்கள்.
விளையும் பா.ரா.முளையிலேயே தெரிகிறது. ஏற்கனவே நாகூர் ரூமியின் சூஃபி வழி ஒரு எளிய அறிமுகத்தை என் வலைத் தளத்தில் அறிமுகப்படுத்தி இருந்தேன். இப்போது உங்கள் புலிகள் துரத்துகின்றனவை என் வலைப்பக்கத்தில் மீள்பதிவு செய்துள்ளேன். நன்றி!
வலைதள வடிவமைப்பு சகிக்கல.
யசோதாவுக்கு வாழ்த்துகள்.
பாரா, பட்டுவுக்கு என் வாழ்த்துக்கள். ரொம்ப சந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. ஆச்சரியம் அவள் வயதை நினைத்து. ஆனால் ஜீனில் இருக்கும் க்ரியேட்டிவ் ஜின் செய்யும் வேலை! precocious daughter. பட்டுவுக்கு என் முத்தங்கள்.
உங்களுக்கு போட்டி வேற எங்கும் இல்லன்னு வீட்ல தான்னு தெரிஞ்சு பாட்டு எழுத போய்டீங்கள ……….வாழ்த்துக்கள்.