நண்பர்களுக்கு வணக்கம். கடந்த ஆறு மாதகாலமாகக் ‘காணாமல் போயிருந்த’ என்னுடைய writerpara ஜிமெயில் முகவரி சற்றுமுன் எனக்குத் திரும்பக் கிடைத்திருக்கிறது.
இந்த மின்னஞ்சல் முகவரியைச் சிலகாலம் எடுத்துக்கொண்டு விளையாடிய நண்பர்கள் அது குறித்து இணையத்தில் எழுதியிருந்ததைக் கண்டிருப்பீர்கள். அதன் தொடர்ச்சியாக மேற்கொண்ட சில நடவடிக்கைகளின் விளைவாக இப்போது இந்த முகவரி எனக்குத் திரும்பக் கிடைத்திருக்கிறது.
சூழ்நிலையைப் புரிந்துகொண்டு ஒத்துழைப்பளித்த கூகுள் நிறுவனத்துக்கும் இதற்காக முயற்சி மேற்கொண்ட சில நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
இனி நீங்கள் தைரியமாக writerpara@gmail.com என்னும் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்குக் கடிதங்கள் எழுதலாம்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.