அமேசானில் பாரா

சமீபத்தில் இலண்டனில் இருந்து ஒரு வாசகர் என்னுடைய புத்தகங்களை வெளிநாடுகளில் வாங்குவதற்கு என்ன வழி என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

மக்கு மாதிரி அவருக்கு http://www.nhm.in உரலை அனுப்பி ஆன்லைனில் வாங்குவது எப்படி என்றெல்லாம் அரைகுறைப் பாடம் சொல்லி முழ நீளத்துக்கு பதில் எழுதினேன். மீண்டும் வந்த அவரது பதிலில் இருந்தது ஒரே வரி. அதில் பார்த்துத்தான் கேட்கிறேன், சொத்து முழுவதையும் இழக்காமல் எப்படி வாங்குவது?

சமீபத்தில் பத்ரியின் வலைப்பதிவில்கூட இந்தப் பதிவின் பின்னூட்டங்களில் இது தொடர்பான ஒரு சிறு விவாதம் நடைபெற்றது.

அதன்பிறகுதான் விசாரித்து அறிந்தேன். என்னுடையது மட்டுமல்லாமல், new horizon mediaவின் அனைத்துப் புத்தகங்களும் இப்போது அமேசான்.காமில் கிடைக்கின்றன. இந்தியா பிளாசாவிலும் இவை இருக்கின்றன.

அமேசான் விலை விகிதங்கள் எனக்குக் கொஞ்சம் புரியவில்லை. ஆனால் நிச்சயமாக இந்தியாவிலிருந்து கப்பல் அல்லது விமானம் ஏற்றி அனுப்புவதைக் காட்டிலும் குறைவே என்று நினைக்கிறேன்.

நண்பர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

அமேசானில் என்னுடைய புத்தகங்கள்

இந்தியா பிளாசாவில் என்னுடைய புத்தகங்கள்
என்.எச்.எம். ஆன்லைன் புத்தகக் கடையில் என்னுடைய புத்தகங்கள்.

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

9 comments

  • அடப்பாவமே…ஏதோ கால்கட்டுடன் அமேசான் காட்டுக்குதான் பயணம் தொடங்கிவிட்டீர்கள்னு நினைச்சேன்… இப்படி ஏமாத்தீட்டீங்களே? 🙂

    >>>>அமேசானில் என்னுடைய புத்தகங்கள்<<<<

    அதுசரி… அலகிலா விளையாட்டுதான் நீங்க எழுதினீங்கன்னு நினைச்சேன்… அதென்ன ”Stochastic and Differential Games: Theory and Numerical Methods (Annals of the International Society of Dynamic Games)”?

    :)))

  • நான் கூட என்னைப் பார்க்க அமேசான் வருகிறீர்களோ என்று நினைத்து ஏமாந்து விட்டேன். என்றாவது ரிப்போர்ர்டரில் என்னைப் பற்றியும் ஒரு தொடர் எழுதுவீர்கள்தானே.அனகோண்டா, அப்போதாவது ஸ்ரீ உ.வே.வே பா.ராகவன் அமேசான் காட்டிற்கு வருவாரா என்று இங்குள்ள குகன் கேட்கிறார் :).

  • இப்போ அமேசான் வந்தவர் நாளை, Borders, Barnes & Noble இப்படி எல்லா கடைகளிலும் வருவாரா ?

  • Amazon a kalakuringa ! 🙂 Ungalai pondravargalin asirvathathudan nanum pathivu poda arambithu ullan.

    Kandipa ungaluku pidikum endru nambugiran.
    http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_02.html

    கருணாநதி அரசு மருத்துவமனையில் ?
    அன்புள்ள முதல் அமைச்சர் அவர்களே,
    உங்களுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று இருந்தால் என்ன லாபம் என்று கிழே பதிவு செய்து இருகிறேன்.

By Para

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Recent Posts

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading