எதிர்பார்க்கவே முடியாத திருப்பம். சூனியனைச் சுற்றி தான் கதை நகரும் என்று என்ணியிருந்த எனக்கு, இவ்வத்தியாயத்தின் இறுதி வாக்கியமெல்லாம் எதிர்பார்க்கவே முடியாததாய் இருந்தது. ஆனால் ஒன்று, அந்த நீல நகரம் பூமியின் ஒரு பகுதி தான். அது எப்படி புவியிலிருந்து பிரிந்து அண்ட வெளியில் அதிலிருக்கும் மனிதர்களுக்கு பாதகமில்லாமல் பயணிக்கிறது என்பதை சென்ற பதிவிலேயே கேட்டிருந்தோம். சரி, இந்த அத்தியாயத்தைப் பார்ப்போம்.
சூனியன் இறங்கிய தலைக்கு உரிமையாளர் பெயர் கோவிந்தசாமி, வயது நாற்பது. பாவம் தாய் தந்தையின் அரவணைப்பு கிடைக்காமலேயே வளர்கிறான். அவன் தாய் அவனுக்குக் கற்பித்ததெல்லாம் இறை பக்கி மட்டுமே. சிறுவதிலேயே இராமலிங்க மடத்திற்கு சென்று ‘அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை’ என்பதை கற்றுக்கொண்டான்.
பதின்பருவத்திலேயே வீட்டைவிட்டு வெளியேறி சிறு சிறு வேலைகள் செய்து, பின்னர் எப்படியோ ஒரு முதலாளியின் கருணையால் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று ஒரு ஜவுளிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தான். அங்கே எதிர்பாராத விதமாக தன் தாயையும், அவள் இரண்டாவது கணவனுக்கும் அவளுக்கும் பிறந்த அவன் தம்பி தங்கையை காண்கிறான். பொறுப்பு அவன் தலையில் ஏற்றப்பட்டுவிடும் என்ற அச்சத்தில் ஊரை விட்டு ஓடி ராமேசுவரம் செல்கிறான். அங்கிருந்து பின்னர் ராமநாதபுரம் சென்று ஒரு சுயசேவகருக்கு சீடன் ஆகிறான்.
பூரண இந்துவாக அந்த குருவால் மாற்றமடைந்த கோவிந்தசாமி, அயோத்தியில் கோவில் கட்ட தன் பங்குக்கு செங்கல் கொண்டு ரயிலில் செல்லும் போது அவனுக்கு பரீட்சயமாகும் நபர் தான் சாகரிகா.
ஒருவழியாக இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த பதினேளாம் நாள் அவனை அவள் “சங்கி” என்று வைதுவிட்டாள்.
ஆகட்டும் அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.