கதையின் மூன்றாவது அத்தியாயத்தின் இறுதியில்தான் அவன் அறிமுகமானான். அவன்தான் இந்தக் கதையின் கதாநாயகன் என அறிய முடிகிறது.
அதற்கேற்றார் போல கதை மிகுபுனைவிலிருந்து விலகி யதார்த்த களத்திற்கு வந்து விட்டது.
இந்தக்கதையில் இந்த அத்தியாயத்தில் வரும் கதைகளோ சம்பவங்களோ எதுவுமே கற்பனை இல்லை. அனைத்துமே உண்மைச் சம்பவங்கள் தாம். அதிலும் நாம் அன்றாட வாழ்வில் நேரடியாக பார்க்கிற மனிதர்களின் அனுபவங்கள்.
நாம் தனித்தனியாக பார்த்து பழகி பரிதாபப்பட்டு கடந்த இத்தனை அனுபவங்களும் ஒரு மனிதனின் வாழ்விலே நடந்திருந்தால் அவன் பாவம்தானே?
அப்படிப்பட்ட பாவங்களுக்கெல்லாம் பாவமான அந்த மனுஷனுக்கு வயது நாற்பது. இனி இழப்பதற்கு எதுவுமற்ற அவனோடு இன்னொருவன் சேர்கிறான்.
அந்த பாவப்பட்ட மனிதனின் ஃப்ளாஷ் பேக்கை அவன் அறிகிறான். அதன் ஒரு பகுதி இந்த அத்தியாயத்தில். மற்றவை அடுத்த அத்தியாயங்களில் வரும் போல.
அப்படியொரு கெட்ட வார்த்தையால் திட்டினால் யாருக்குத்தான் கோபம் வராது. அதிலும் தனது புதுமனைவி திருமணமான பதினேழாவது நாள் திட்டினால்?
நமது ஹீரோ என்ன செய்தார்? தொடர்ந்து விவாதிப்போம் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு.
தொடர்ந்து இணைந்திருங்கள்