முல்லைக்கொடி எப்படி பிறக்கும்போதே தேசியவாதியாக பிறந்தாள் என்பதில் இருந்து ஆரம்பிக்கிறது இந்த அத்தியாயம். இன்னொரு தேசியவாதியான கோ.சாமியை அவள் எப்படி சந்தித்தாள் அவர்களுக்குள் என்ன நிகழ்ந்தது என்பதெல்லாம் சுவாரஸ்யம்.
இந்த கோ.சுவாமி அதுல்யாவை மட்டும்தான் திருமணம் செய்திருக்கிறான் என நினைத்தால் இப்போது இன்னுமொரு கல்யாணம் வந்து பல்லிளிக்கிறது.
அதுவும் அதற்காக அவன் சொல்லும் கதையும் அதன் பின்னர் நடந்தவையும், அடடா சூனியன் எவ்வளவு அழகாக பாத்திரங்களை உருவாக்கி கோ.சாமியை கலங்க வைக்கிறான்.
பொது போக்குவரத்தில் நீலவனத்திற்கு பயணம் செல்லும் கோ.சாமி ஆர்வக்கோளாறில் தன்னை வெளிப்படுத்த அவனை வெண்பலகையின் மூலம் ஊரே அறிந்திருப்பதும் அவர்கள் அவனைக் கண்டதும் குதூகலமாய் தங்களது கருத்துக்களை வாரி இறைப்பதும் நடக்கிறது.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.