இதுவரை வெளியாகியுள்ள என்னுடைய புத்தகங்களைப் பற்றிய சிறிய அறிமுகக் குறிப்புகளை மொத்தமாகத் தொகுத்திருக்கிறேன். இது யாருக்கு உதவும் என்று தெரியவில்லை. ஆனால் சரித்திரத்துக்கு ரொம்ப முக்கியம்.
எழுத்தாளன் சுயமாக அச்சுப் புத்தகமும் மின்நூலும் வெளியிட்டுக்கொள்ளக் காலம் கட்டாயப்படுத்தும் சூழலில் அவனது கேட்லாக்கையும் அவனேதான் உருவாக்க வேண்டியுள்ளது. வேறு வழியில்லை. தமிழ்ச் சூழலென்பது சுற்றுச் சூழலினும் மாசுபட்டிருக்கிறது.
இந்தக் குறிப்புகளில் பலவற்றை என் நண்பர்கள் மருதனும் ஹரன் பிரசன்னாவும் எழுதியிருக்கிறார்கள். சிலவற்றை நானே எழுதியிருக்கிறேன். என்னைத் தவிர மற்ற இருவருக்கும் நன்றி. இம்மின்னூல் வடிவத்துக்கான முகப்புப் படத்தை வடிவமைத்துத் தந்தவர் வைதேகி. அவருக்கு என் நன்றி.
மேற்கொண்டு எனது புத்தகங்கள் வெளிவரும்போது இந்தப் புத்தகம் அவ்வப்போது அப்டேட் செய்யப்படும்.
கிண்டில் மின்நூலாகவும் இதனை வெளியிடுகிறேன். [விலையற்ற நூல்தான்] அது தயாரானதும் லிங்க் தருகிறேன்.
இப்போது சமூகம் மிகவும் விரும்பும் பிடிஎஃப் மட்டும். அதனை இங்கு தரவிறக்கிக் கொள்ளலாம்.