மேற்கு வழியே கிழக்கு

சந்திரசேகரன் கிருஷ்ணனின் இந்தப் பதிவை வாசிக்கவும். கிழக்கு புத்தகங்களை சொந்தமாக வாங்கித்தான் படிக்க வேண்டுமென்பதில்லை. வாடகைக்கு எடுத்தும் வாசிக்கலாம் என்கிறார்.

நாநூறு சொற்களுக்குக் குறையாமல் ஒரு மதிப்புரை மட்டும் வேண்டுமென்கிறார். ‘வாடகைக்கு வாசிக்கலாம்’ என்று சொன்னாலும் வாடகைப் பணம் என்று ஏதும் வசூலிப்பதில்லை. இலவச நூலகம் மாதிரிதான்.

இப்போதைக்கு நாற்பது நூல்களை இந்தத் திட்டத்தின்கீழ் நீங்கள் இலவச்மாகப் படித்து, மதிப்புரை செய்து, நூலைத் திருப்பித் தரலாம். தந்தால், அடுத்த நூல்.

சென்னையில் வசிக்கும் வாசகர்களுக்கு மட்டுமே இப்போது இந்த வசதி உள்ளது என்கிறார் இவர். பயன்படுத்திப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

Share

8 comments

  • 2 மாதத்திற்கு முன்பு கிழக்கின் விமர்சனத்திற்கு ரெடி மூலம் 'நேர்முகம்' என்ற புத்தகத்தை வாங்கிவேன். சில காரணங்களால் இதுவரை ஒரு வரிகூட படிக்க முடியவில்லை. இன்னொரு வைப்பா…! உங்களைப் பார்க்க நேரில் வரவேண்டும் என்று இருக்கிறேன் அப்பொழுது இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன். நன்றி பாரா.

  • நல்ல பதிவு, நன்றி பத்ரி.

  • மரியாதையா இந்த போஸ்ட்ட நீங்களே தூக்கறீங்களா இல்ல ஆள் வச்சு ஹேக் பண்ணி தூக்கணுமா.. இந்த போஸ்ட்ட பார்த்தாலே பத்திகிட்டு எரியுது..

  • அன்பு பாரா,குமுதம் ரிப்போர்ட்டரில் உங்கள் தொடரும்,சொக்கன் எழுதிய தொடரும் திடீரென முடிந்த மாதிரி இருந்தது.வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள கூடியதாக இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்.காரணத்தை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.உங்களுடைய வாசகன் என்ற முறையில் தெரிந்து கொள்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

  • நீங்கள் போட்ட பதிவுகளின் எண்ணிக்கையை விட மாற்றிய டெம்ப்ளேட்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
    புதுசா ஏதாவது எழுதிப் போடுங்க சார்! 🙂

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி