கபடவேடதாரி – இந்துமதி என். சதீஷ் மதிப்புரை (அத்தியாயம் 5)

தான் ஒரு மூடன் என்பதை உணர்ந்திருந்த கோவிந்தசாமியின் மண்டை ஓட்டிற்குள் இறங்கிய சூனியனுக்கு உயிர்பிழைத்த மகிழ்ச்சி.
கருத்தளவில் சிறிதும் பொருந்தாத கோவிந்தசாமி- சாகரிகா திருமணம் 17 நாட்களில் கேள்விக்குறியாகிறது.நவநாகரீகயுவதியான, ஒழுக்க நெறிகள் அற்ற சாகரிகாவை திருப்திப்படுத்த கோவிந்தசாமி பல வழிகளில் முயலுகிறான்.
கருணையில் பிறந்த காதல் காணாமல் போக, சாகரிகாவால் சொல்லப்படும் சங்கி எனப்படும் சொல் கோவிந்தசாமியை மிகுந்த காயப்படுத்துகிறது.
சாகரிகாவை திருப்திபடுத்துவதற்காக தன் வம்ச சரித்திரத்தை கோவிந்தசாமி சொல்ல, அது எந்த வகையிலும் சாகரிகாவை ஈர்க்கவில்லை.கோவிந்த சாமியின் வம்ச சரித்திரம் சாகரிகாவிற்கு மட்டுமல்ல… நமக்கும் சலிப்பையே ஏற்படுத்துகிறது.
கோவிந்தசாமியை பிடிக்காத அவன் மனைவி அவனை விட்டு விலகிச் செல்ல ….அவளைத் தேடி கோவிந்தசாமி நீல நகருக்குள் நுழைகிறான். சாகரிகாவை கண்டுபிடிக்க சூனியன் உதவி செய்வதாக கூறி கோவிந்தசாமியுடன் சினேகிமாகிறான்.
புத்திசாலி சூனியனும் மூடன் கோவிந்த சாமியும் சாகரிகாவை கண்டுபிடிப்பார்களா….. சாகரிகா மீண்டும் கோவிந்த சுவாமியுடன் இணைவாளா… சூனியன் கோவிந்தசாமியை எங்கனம் பயன்படுத்திக் கொள்ளப் போகிறான்?
விடைகளுக்காய் காத்திருப்போம்.
Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி