01. என்றார் அவர்
02. என்பது ஆகும்
03. களுக்கென்று சிரித்தாள்
04. கண்கள் பனித்தன
05. என்பதாய் இருக்கிறது
06. குழந்தைக்கும் தெரியும்
07. பளீரிட்டன
08. மட்டும் நிஜம்
09. என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்
10. திருதிருவென முழித்தார்
11. ஜில்லிட வைத்தது
12. மீட் பண்ணுவோம்
13. என்ன செய்வதென்றே புரியவில்லை
14. வார்த்தைகளே இல்லை
15. அவரின் அப்பா
16. என்ன கொடுமை இது?
17. ச்சீய்
18. அம்மாவின் நியாபகம்
19. செய்துப் பாருங்கள்
20. சொந்த செலவில் சூனியம்
21. விடிந்ததும் முதல் வேலையாய்
22. சான்சே இல்லை
23. கொடுத்த காசுக்கு
24. நண்பர் ஒருவர்
25. அந்த வகையில் சந்தோஷம்தான்
நெசமாகவே ஒன்னும் புரியலே
நல்ல பதிவு நன்றி பத்ரி என்பது இதில் விட்டுப் போன பாவம் உங்களையே சாரும் 😉
புதுக் கவித அட்டெம்ப்ட் என்று சொல்லிவிட்டுச் செய்திருக்கலாம்!
இது மாதிரி நான் எழுதினா, லூசு என்கிறார்கள். கொஞ்சம் தெரிந்தவர் என்றால் “ஆஹா, ஓஹோ” என்கிறார்கள். இவர்களை நம்புவதிலோ நினைபதிலோ ஒன்றும் நடப்பதில்லை. என்னை நம்புவதிலே தான் அனைத்தும் உள்ளது. “a person with belief is equivalent to millions with interest “. கலக்குங்க பாரா. எனக்கு எதுவும் புரியவில்லை என்றாலும். லபட சரளா என்று பல இலகணங்கள் நீங்கள் கூறினாலும், ஏதும் எமக்கு புரிய போவதில்லை.
சாருநிவேதா இலக்கியம் போல,
ஸார் மணிரத்னத்தின் ராவணன் மாதிரி இருக்கு. கொன்னுட்டீங்க
என்னைச் சொன்னேன்
க்ளிஷே?
ஒண்ணும் புரியல சார்! எதாவது hint கொடுங்க, முயற்சி பண்ணறோம் !!!!
இனம் புரியாத பீதி – மிஸ்ஸிங்..அது தான் முதலில் வந்திருக்கணும்..இல்லையா பாரா ஜீ?
ரமணிசந்திரன் கதை(கள்) ஏதாவது படித்தீர்களா? 🙂
இந்த வார்த்தைள் இல்லாம சிறுகதைகள் எழுதமுடியாதுன்னு சொல்ல வர்றீங்களா..?!
பதினொன்றில் ஒன்று பழுதில்லை.
ஆனாலும் உங்களுக்கு அடக்கம் ஜாஸ்திங்க..ஒரு காவியத்தைப் படைச்சிட்டு எப்படி உங்களால இவ்வளோ அமைதியா இருக்க முடியுது!
//பதினொன்றில் ஒன்று பழுதில்லை.//
அந்த பதினொன்றில் ஒன்று கண்ணனின் பின்னூட்டம்(இது மாதிரி நான் எழுதினா, லூசு என்கிறார்கள். கொஞ்சம் தெரிந்தவர் என்றால் “ஆஹா, ஓஹோ” என்கிறார்கள்) என நினைக்கிறேன்
நான் உங்களை அண்டன் செகாவ் துரத்துவது மாதிரி கனவு கண்டேன் என்று சொன்னதற்கு நீங்கள் சொல்லிய பதிலின் அர்த்தம் இப்போது புரிந்து விட்டது.
பார்த்தசாரதி ஜெயபாலன்: உங்களை மாதிரியே எனக்கு ட்விட்டரில் ஸ்கேன்மேன் என்றொரு பிரகஸ்பதி நண்பராக இருக்கிறார். இந்தப் பாட்டை அவர் இன்னும் நல்ல சுருதியில் அடிக்கடி பாடுவார்.
கண்கள் பனித்தன,குழந்தைக்கும் தெரியும்,மட்டும் நிஜம்,என்ன செய்வதென்றே புரியவில்லை,வார்த்தைகளே இல்லை,அவரின் அப்பா,என்ன கொடுமை இது?,அம்மாவின் நியாபகம்,சொந்த செலவில் சூனியம்,கொடுத்த காசுக்கு…இதைவிட ரத்தின சுருக்காமய் 2g- ஸ்பெக்ட்ரம் கேஸை விளக்க உம்மை விட்டால் வேறு ஆளில்லை.
ஆதம் முஹம்மத்: அருமையாகச் சிந்தித்திருக்கிறீர்கள். வாழ்த்துகள். ஆனால் நான் இதில் அரசியல் பொடி ஏதும் வைத்து யோசிக்கவில்லை.
//பதினொன்றில் ஒன்று பழுதில்லை.//
அது அநேகமாய் இதுதான்.
/இந்த வார்த்தைள் இல்லாம சிறுகதைகள் எழுதமுடியாதுன்னு சொல்ல வர்றீங்களா..?!/
ஆனால் சிறுகதைக்கு பதிலாக ‘பதிவு எழுத’ என்றிருக்க வேண்டுமென நினைக்கிறேன்!
அன்புடன்
வெங்கட்ரமணன்
முந்தைய பின்னூட்டத்தில் சொல்லமல் விட்டது, ஆ…அந்த தலைப்பு சொல்லால் அடித்த சுந்தரி…கண்டிப்பாக இது 2g மாதிரி தான் தெரியுது பாராஜி,
எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது.
என்ன இருந்தாலும் இதில் தலை ’சுஜாதா’ மாதிரி ’ஜல்லி’யடிக்க முடியுமா? என் கண்கள் பனிக்கிறது. உங்களை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.
01. ஒன்றும் புரியவில்லை
02. எனக்கு மட்டும் ஏன் இப்பிடி
03. நடுநவீனத்துவம் நர்த்தனமிடுகிறது
04. மிகச் சிறந்த சொற்றொடர் தொகுப்பு
05. இவைகளை விலக்கினால் ஜல்லியடிக்காமலிருக்கலாம்
06. 🙂
“என்று குழப்பினார்” என்றும் சேர்த்துக்கலாம்!
கூட்டம் சேர்க்கும் தந்திரம்.
வ்ரைட்டர் பேயோன் பின்னூட்டத்தில் பின்னுவார் என எதிர்பார்த்தேன். பொருமையை சோதிக்காதீர்.சீக்கிரம் சொல்லுங்க சார்.
இந்தப் பாட்டை இப்போது தான் முதல் முறையாக பாடுகிறேன். சுருதி கம்மியாகக் கூட இருக்கலாம்.
இனி மேல் பாடும் உத்தேசமும் இல்லை.நான் உங்களை “அப்படி” நினைக்கவில்லை.
ஏனென்றால் எல்லாவற்றிலும் நீங்கள் ஒத்து வந்தாலும் மிக முக்கியமான ஒன்று இடிக்கிறது.
அதற்கும் உங்களுக்கும் ரொம்ப தூரம் என்று நீங்களே பலமுறை சொல்லி வந்திருக்கிறீர்கள்.
எங்கள விட்ருங்க.சமீபத்தில் கமல்ஹாசனை சந்தித்தீர்களா அல்லது அவ்ரது பேட்டி எதையாவது….!!!???
ரைட்டர் பேயோனும்,ரைட்டர் பாராவும் ஒருவர்தானா என்ற சந்தேகம் உறுதுயாகிக் கொண்டே வருகிறது.முன்னவரின் ‘வணக்கம் நாந்தான்’ கட்டுரையும் உங்களின் ‘சொல்லால் அடித்த சுந்தரியும்’ ஓரலையில் இருக்கிறது(கிட்டத்தட்ட)…! ‘இவர்கள் இப்படித்தான்’ என்ற வாசகர்களின் மனோநிலையில் இருந்து மாற்றம் கொண்டுவருவதுதான் உங்களிருவரின் நோக்கமோ..? வாசிப்பவர்களின் சிந்திக்கும் திறனை உயர்த்துவது என்ற சிந்தனை உடையதாக உள்ளது இந்த இருவரின் கட்டுரைகளுமே…!! நன்றி.
1 பாராட்டுகளையும்
2 எழுதி மற்றவர்களை
03 இதுதான்கொஞ்சம்
04 வேண்டுமானாலும்
05 எல்லாம்
06 பிரபலம்
07 குழப்பிஅவர்கள்
08 எனக்குப்புரிந்தது
09 பெறலாம்
10 ஆகிவிட்டால்எது
10 தடவைகள் படிச்சி பார்த்தும் எனக்கு ஒண்ணும் புரியலை. அல்லது நான் ஒரு மண்டுகமா ? (டியூப் லைட்டா) தயவு செய்து ஒரு கோர்வையா சொல்லுங்களேன். ஏன் இப்படி ஒரு விபரீத ஆசை யாரை குழப்ப இந்த கவிதை?
@Ganpat
எனக்குப்புரிந்தது
இதுதான்
கொஞ்சம்
பிரபலம்
ஆகிவிட்டால்
எது வேண்டுமானாலும்
எழுதி மற்றவர்களை
குழப்பிஅவர்கள்
பாராட்டுகளையும்
பெறலாம்
????
@SubramaniV
அதாவது நான் ஒரு இலக்கியவாதி இல்லை என மறைமுகமாக சொல்கிறீர்!
தமிழ் பதிவாளர்: தனக்கும் புரிந்து மற்றவர்களுக்கும் புரியும்படி எழுதுபவர்
தமிழ் எழுத்தாளர்: தனக்கு மட்டும் புரிந்து மற்றவர்களுக்கு புரிவது சற்று கடினமாக எழுதுபவர்
தமிழ் இலக்கியவாதி: தனக்கு புரிவதாக நினைத்துக்கொண்டு மற்றவர்களுக்கு அறவே புரியாதபடி எழுதுபவர்
இதெல்லாம் கடந்த மோட்ச நிலை ….
தமிழ் பேரிலக்கியவாதி:தனக்கும் அறவே புரியாமல் எழுதுபவர்.ஆனால் இவருக்கென்றே இருக்கும் ஒரு சிறிய வாசகர் வட்டம் இவர் எழுத்திற்கு பல்வேறு அர்த்தங்கள் கற்பித்து,இவரை “தெய்வமே” என தொழுது கொண்டிருக்கும்