கனகவேல் காக்க திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் பாங்காக்கில் நடந்து முடிந்திருக்கிறது. சும்மா சில புகைப்படங்கள். படம் ஜூன் முதல் வாரத்தில் திரைக்கு வரும் என்று நினைக்கிறேன்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.
Nalla padam kaatirukeengalae ;))) Para is missing ;(
என்ன சார் உங்களுக்கு வயசாச்சு. ஹீரோவா எண்ட்ரி கொடுத்து தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆகி எங்க தலையெழுத்தை எல்லாம் மாத்துங்க சார்.
நீங்க பாங்காக்குக்கு போகலையா? அங்க நின்னு ரெண்டு போட்டோ எடுத்து – ஜெமோ மாதிரி – போடுவீங்கன்னு நினைச்சேனே… :>
//நீங்க பாங்காக்குக்கு போகலையா? அங்க நின்னு ரெண்டு போட்டோ எடுத்து – ஜெமோ மாதிரி – போடுவீங்கன்னு நினைச்சேனே… :>//
பிரசன்னா, நான் வசனம் எழுதிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் நிறைவடைந்துவிட்டது. ஆனால் ஒரு நாள்கூட நான் ஷூட்டிங் சென்றதில்லை. பெரும்பாலான காட்சிகள் சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலுமேதான் எடுக்கப்பட்டன. பல காட்சிகளுக்கு மொபைல் போன் மூலம் வசனம் சொல்லியிருக்கிறேன். ஒரு சில முக்கிய வசனங்களை எஸ்.எம்.எஸ்ஸாகவும் அனுப்பினேன். நேரில் மட்டும் போகவில்லை. கூடாது என்பதல்ல. நேரமில்லை.
ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு ஷூட்டிங் போனால் சாமி கண்ணைக் குத்தும். இயக்குநர் நல்லவர், உத்தமோத்தமர். எனவே புரிந்துகொண்டு ஒத்துழைத்தார். படம் நன்றாக வந்திருப்பதாக யூனிட்டில் பலர் சொன்னார்கள். பார்க்கவேண்டும்.
அடுத்தப் பட ஷூட்டிங்கும் ஆரம்பித்து பாதி முடிந்துவிட்டது. போகவில்லை. ஒரு ஷெட்யூலுக்கு உரியதை மட்டும் எழுதிக்கொடுத்துவிட்டேன்.
ஒரு விஷயம். ஷூட்டிங் சமயத்தில் அவசர அவசரமாக எழுதித் தள்ளாமல், தொடங்குவதற்கு முன்னமேயே உட்கார்ந்து மொத்தமாக எழுதிவிடுவதுதான் சரியான, நல்ல முறை என்று கருதுகிறேன்.தேவைப்பட்டால் திருத்தங்களை மட்டும் அவ்வப்போது செய்துகொண்டால் போதும். இதற்கு இயக்குநர்கள் ஒத்துழைக்க வேண்டும். முழு ஸ்கிரிப்டையும் தயாராக வைத்துக்கொண்டு ஷூட்டிங் புறப்படும் இயக்குநர்களால் மட்டுமே இது சாத்தியம். என் அதிர்ஷ்டம், எனக்குக் கிடைக்கும் இயக்குநர்கள் அப்படியாக இருக்கிறார்கள்.
மற்றபடி இந்தமுறை பாங்காக் போகாதது பற்றிப் பெரிய வருத்தமில்லை. அடுத்தப் பட டிஸ்கஷனை அங்கே வைத்துக்கொள்ளலாம் என்று டைரக்டர் சொல்லியிருக்கிறார்;-) பாழாய்ப்போன பாரா ஷூட்டிங்குக்குத்தான் போகமாட்டானே தவிர டிஸ்கஷன்களுக்கல்ல.
பி.கு: டிஸ்கஷனுக்கு லீவு போட்டால் சாமி கண்ணைக் குத்தாதா என்று கேட்காதீர். ஒரு பத்து நாளைக்கு ஆபீசை பாங்காக்குக்கு மாற்றிக்கொண்டால் போச்சு.
//பிரசன்னா, நான் வசனம் எழுதிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் நிறைவடைந்துவிட்டது. ஆனால் ஒரு நாள்கூட நான் ஷூட்டிங் சென்றதில்லை. பெரும்பாலான காட்சிகள் சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலுமேதான் எடுக்கப்பட்டன. பல காட்சிகளுக்கு மொபைல் போன் மூலம் வசனம் சொல்லியிருக்கிறேன். ஒரு சில முக்கிய வசனங்களை எஸ்.எம்.எஸ்ஸாகவும் அனுப்பினேன். நேரில் மட்டும் போகவில்லை. கூடாது என்பதல்ல. நேரமில்லை.//
பாரா, நீங்கள் டிவிட்டரை பயன்படுத்தாதது மிகுந்த வருத்தமளிக்கிறது.
//நீங்கள் டிவிட்டரை பயன்படுத்தாதது மிகுந்த வருத்தமளிக்கிறது//
தலை முழுகிவிட்டேனே, தெரியாதா?
//ஒரு பத்து நாளைக்கு ஆபீசை பாங்காக்குக்கு மாற்றிக்கொண்டால் போச்சு//
வாங்க.. வாங்க.. எப்போ வர்றீங்க எங்க ஊருக்கு? டிக்காஷனுக்கு, அடச்சே, டிஸ்கஷனுக்கு என்னையும் கூப்பிடுங்க.
(குறிப்பு : மேலே உள்ளது பாங்காக் இல்லை, பட்டாயா. அது பாங்காக்கிலிருந்து 180 கி.மீ. தூரம்)
Hearty Wishes Raghavan.
தமிழ் திரைப்பட வசனத்தில் ஒரு Trend setter ஆக வாழ்த்துகள்.
பாராஜி,
ஒரு தொப்புள் காணோம், ஒரு கண்ணைக் குத்துகின்ற பளீர் கோணம் காணோம், ஒரு இடை, ஒரு தொடை, ஊஹும்… நன்றாக ஃபிலிம் காட்டி அல்வா கொடுத்திருக்கிறீர்.
சரி, சரி, உம்முடைய வசனத்திற்கு உயிரூட்டி நான் ஜீவன் தந்து மக்கள் வதைபடுவது எப்போது?
எல்லே ராம்
எவ்ளோ நாள் தான் நீங்க போட்ட படத்தையே பார்த்துட்டு இருக்குறது. சட்டு புட்டுனு வாங்க.
படம் எப்போ ரிலீஸ் பா.ரா..???
[…] செல்வன் போல் வசனகர்த்தா பாராவும் வினைத் தொகை; காலங்காட்டும் […]