வரும் ஞாயிற்றுக்கிழமை [6.6.2010] மாலை 5.30 மணிக்கு கிழக்கு மொட்டை மாடியில் Paradise Now – பாலஸ்தீனியத் திரைப்படம் திரையிடப்படுகிறது. அனைவரும் வருக.
இயக்கம் : Hany Abu-Assad
எழுத்து : Hany Abu-Assad – Bero Beyer
ஒளிப்பதிவு : Antoine Heberle
2005ம் ஆண்டு வெளியான இந்தப் படம் கோல்டன் க்ளோப் விருது பெற்றது. உணர்ச்சிகரமான, அற்புதமான திரைக்கதையைக் கொண்டது. உள் அரசியல்களால் ஆஸ்கர் விருது பெறாமல் போன படம் இது.
மனித வெடிகுண்டுகளாக டெல் அவிவுக்குள் நுழையும் இரண்டு பாலஸ்தீனிய இளைஞர்களைச் சுற்றி நிகழும் கதை என்று மேலோட்டமாக ஒரு வரியில் இப்படத்தைப் பற்றிச் சொல்வது அபத்தமாக இருக்கும். இடமும் இருப்பும் லட்சியங்களும் மயக்கங்களும் உறவும் உணர்வுகளும் முட்டிமோதும் அற்புதத்தை சொற்களில் விவரிக்க இயலாது. பார்க்கத்தான் வேண்டும்.
அனைவரும் வருக.
இப்படத்தைக் குறித்த விக்கிபீடியா குறிப்புகள் இங்கே.
*
இனி ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை மாலை சரியாக 5 மணிக்கு கிழக்கு மொட்டை மாடியில் ‘கிழக்கு உலக சினிமா திரையிடல்’ நடைபெறும். [வரும் ஞாயிறு மட்டும் மாலை 5.30க்கு] வலையுலகினர், கிழக்கு வாசகர்கள் அனைவரையும் கிழக்கு சார்பில் அன்புடன் வரவேற்கிறேன்.
நேயர்கள் சார்பாக ஒரு ரிக்வெஸ்ட்!
இதுவரை போடப்பட்ட திரைப்படங்களில் ஒரு முத்தக்காட்சி கூட இல்லை என்று வருத்தப்படுகிறார்கள், இனி கொஞ்சம் சுரேஷ் கண்ணன் பார்க்கும் உலகபடம் மாதிரியும் படம் போட்டால் கல்யாணம் ஆகாத கட்டகாளி பசங்க உங்களுக்கு நன்றி சொல்வார்கள்!
திரையிடல் தொடர்வது குறித்து அறிய மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள்…
மகிழ்ச்சி.
வாழ்த்துகள் மற்றும் மகிழ்வுகள்..
இந்த படத்தை நான் பார்த்திருக்கிறேன். என்டிடிவி லூமியரில் பலமுறை ஒளிபரப்பினார்கள். இந்த உலக சினிமாவை நான் முன்பே பார்த்துவிட்டேன்.
பேயோன், நீங்கள் பார்க்காத உலக சினிமா உண்டா? கதைச்சுருக்கத்துடன் கூடிய டிவிடி அட்டை கொண்ட படம் இது.
[…] This post was mentioned on Twitter by Manion, writerpara. writerpara said: New Blog Post: கிழக்கு உலக சினிமா http://writerpara.com/paper/?p=1249 […]
கிழக்கு சினிமா – எல்லா தரப்பினரையும் கவரும் வகையினில் திரைப்படங்களினை திரையிட வாழ்த்துக்கள் 🙂
//பேயோன் | June 3rd, 2010 at 12:38 PM
இந்த படத்தை நான் பார்த்திருக்கிறேன். என்டிடிவி லூமியரில் பலமுறை ஒளிபரப்பினார்கள். இந்த உலக சினிமாவை நான் முன்பே பார்த்துவிட்டேன்.///
எந்த சினிமாதான் நீங்க பாக்கல எல்லாம் தான் பார்த்துட்டீங்க பார்த்துக்கிட்டிருக்கீங்க 🙂
படம் ரீலிசுக்கு முந்தி பார்த்தீங்களா இல்ல…? 🙂
//சுரேஷ் கண்ணன் பார்க்கும் உலகபடம் மாதிரியும் // குசும்பன்: இதென்ன கலாட்டா?
/கதைச்சுருக்கத்துடன் கூடிய டிவிடி அட்டை/ பேயோனுக்கு எதிரான வன்கொடுமை இந்த வரிகள்!
மிக்க நல்லது. நன்றி!
திரையிடல் தொடர்வது மகிழ்ச்சி
திரையிடல் தொடர்வது மகிழ்ச்சி
நல்ல பா.ரா, நன்றி பதிவு!
Dear Sir,
Do you charge entry fee from the viewers?
If so please let us know, so that viewers come prepared.
Thank you so much sir.
Kumar.
குமார்: கட்டணமெல்லாம் ஒன்றுமில்லை. யாரும் வரலாம்.
.
பாரா,
ஆரம்ப காலத்தில் கிழக்கு இண்டர்நெட்டில் படங்களைச் சுட்டபோது நீங்கள் சொன்ன பதில் “எல்லாரும்தான் செய்கிறார்கள்” என்று. எந்தவித கூச்சநாச்சம் இன்றி அடுத்தவரின் படங்களை வணிகத்துக்குப் பயன்படுத்திக் கொண்டீர்கள். அதன் பின்னால் பத்ரி இது தெரியாமல் செய்தது. காப்பிரைட் சட்டங்களில் இனி கவனமாக இருப்போம் என்று சொன்னார்.
இப்போதும் கவனமா இருங்கள்.
ஒரிஜினல் சட்டபூர்வமான டிவிடிக்களாக இருந்தாலும் டிவிடிக்கள் பெரும்பாலும் தனிச்சுற்றுக்கான பிரத்யோக வாசகங்களுடன் , இன்டர்போல் மற்றும் அமெரிக்க FBI warning டன் வரும்.
இப்படி குழுத்திரையிடல் செய்ய தனி அனுமதி வேண்டும். அதை மீறுவது குற்றம்.
***
ஒரு வேளை பைரஸி காப்பிகளை வைத்து நீங்கள் படங்காட்டினால் அது பெருங்குற்றம்.
கிழக்கு வெளியீடுகளை மலிவு விலைப்பதிப்பாக உங்களின் அனுமதியில்லாமல் ஒரு மொட்டை மாடியில் வைத்து விற்றால் அது சரியாகுமா?
பைசா காசு பெறாத வலைப்பதிவு கதைகள்/இலக்கியச் ஜல்லிகள் போன்ற கிறுக்கல்களையே நம்மவர்கள் “என்னைக் கேட்காமல் உன்பதிவில் காப்பி செய்யாதே” என்ற ரேஞ்சில் பேசிக் கொள்ளும்போது இது போன்ற தெரிந்தே செய்யும் விசயங்கள் தவிர்க்கப்பட வேண்டியது.
***
பலமுறை பைத்தியக்காரனிடம் சொன்னது தகவலுக்காக உங்களுக்கும். இலஞ்சம் எப்படி தேசியமயக்காப்பட்டு குற்றவுணர்வு இல்லாமல் எல்லாராலும் செய்யமுடிகிறதோ அதுபோல பைரஸி படங்களை பொதுவில் திரையிட்டு பார்ப்பதும் எந்த குற்றவுணர்வும் இல்லை என்று ஆக்கிவிடாதீர்கள்.
:-(((
***
கல்வெட்டு: தகவலுக்கு நன்றி. கவனத்தில் கொள்வேன்.
கிழக்கு வெளியீடுகளை மலிவு விலைப்பதிப்பாக உங்களின் அனுமதியில்லாமல் ஒரு மொட்டை மாடியில் வைத்து விற்றால் அது சரியாகுமா?//
கல்வெட்டு சூப்பர் ஐடியா 🙂
கிழக்கு உலக சினிமா திரையிடல் குறித்த அறிவிப்பு மகிழ்வைத் தருகிறது. நன்றி!
-ப்ரியமுடன்
சேரல்
கல்வெட்டு சொல்வது 100% உண்மை.சட்டப்படி நீங்கள் கடைகளில் வாங்கும் மோசர் பேயர் சிடி/டிவிடிகளை வீட்டில் மட்டும்தான் பார்க்க அனுமதி, பொதுவில் திரையிட அனுமதி இல்லை.அவற்றை ஹோட்டல்கள்,கேபிள் டிவி போன்றவற்றில் ஒளிபரப்ப உரிமை இல்லை. பொடி எழுத்தில் இருந்தாலும் சட்டம் சட்டம்தான்:).இது வெளிநாட்டுப் படங்களின் டிவிடிகளுக்கும் பொருந்தும்.
நீங்கள் கட்டணம் வசூலிக்கவில்லை,இலவசமாகத்தான் காண்பிக்கிறோம்,அதுவும் உலக சினிமா ரசனையை வளர்க்க என்று சொல்லக் கூடும்.சட்டப்படி இது எடுபடக்கூடிய வாதமா ன்பதை உறுதி செய்து கொள்ளவும்.அதன் பின் திரையிடவும்.திரைப்பட சங்கங்கள் பொதுவாக திரையிடுவது திரைப்படங்களை, அவற்றின் டிவிடி/சிடிக்களை அல்ல.16 எம் எம்/32 எம் எம்/70 எம் எம் படங்களை திரையிடும் போது அவை இவ்வாறு திரையிடப்படும் என்ற புரிதலுடன் சுற்றுக்குவிடப்படுகின்றன.பதிப்புரிமை சட்டத்தின் வீடுகளில் பார்க்க வெளியிடப்படும் டிவிடிகளை பொதுவில் திரையிடுவது அனுமதிக்கப்படுவதில்லை.
வாழ்த்துகள் பா. ரா.
வணிக நோக்கு இல்லாமல் இது இருந்தால் வரவேற்க வேண்டிய ஒன்று. சட்டத்தை காட்டி குற்றம் சொல்வது சரி அல்ல.., இதன் மூலம் அந்த தயாரிப்பாளருக்கு எந்த இழப்பும் வந்துவிடப் போவதில்லை.
இந்த மாதிரி படங்களின் ஒரிஜினல் டிவிடிக்களை வாங்கி வீட்டில் போட்டுப் பார்க்கும் அளவிற்கு நாம் இன்னும் வளரவில்லை.
அஞ்சு பைசா திருடறது தப்பா!
உலக சினிமா திரையிடல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. காரணங்களும் முழு விவரமும் http://thoughtsintamil.blogspot.com/2010/06/blog-post_04.html.