லிங்கு சாமி!

ஒருவழியாக, இப்போது வரப்போகிற புதிய புத்தகங்களுக்கு என்னெச்செம் தளத்தில் லிங்க் போட்டுவிட்டாற்போலிருக்கிறது. நல்லவர்கள் நீடுவாழ்க. என்னுடைய இந்தாண்டுப் புத்தகங்களை என்.எச்.எம். தளத்தில் பார்வையிடவும் வாங்கவும் கீழ்க்கண்ட சுட்டிகள் உதவும்.

1. ஆர்.எஸ்.எஸ் – மதம் மதம் மற்றும் மதம்
2. காஷ்மீர்: அரசியல்-ஆயுத வரலாறு
3. அலகிலா விளையாட்டு
4. கொசு
5. உணவின் வரலாறு
6. புகழோடு வாழுங்கள்

என்னுடைய பிற அனைத்து நூல்களையும் மொத்தமாகப் பார்வையிட இங்கே செல்லலாம்.

இந்த வருடம் ஆறு புத்தகங்கள் என்பது நானே எதிர்பாராதது. புத்தகக் கண்காட்சியில் இந்த ஆறையும் மொத்தமாக வாங்குகிற நல்லவர்களுக்கு என் சார்பில் பிரசன்னா லிச்சி ஜூஸ் வாங்கித் தருவார்.

Share

6 comments

  • அப்போ onlineல புக் வாங்குற என்னை மாதிரி கோவிந்தசாமி க்கு யாரு லிச்சி ஜூஸ் வாங்கிதருவாங்க?
    #டவுட்டு

  • நீங்கள் ராமசாமிதானே? கோவிந்தசாமி என்று ஏன் மாற்றிச் சொல்கிறீர்கள்? கோவிந்தசாமி க்ளப் நிரம்பி வழிகிறது. புதிதாக யாரையும் சேர்க்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. எனவே உங்களுக்கு லிச்சி ஜூஸும் கிடையாது.

  • >>என் சார்பில் பிரசன்னா லிச்சி ஜூஸ் வாங்கித் தருவார்
    – நீங்க இப்படி சொல்றீங்க…ஆனா பிரசன்னா பாகற்காய் ஜூஸ் வாங்கித் தரப் போவதாகப் பட்சி சொல்கிறது…கவனம்.

  • ஆர் எஸ் எஸ் புத்தகத்தை வாங்கிவிட்டு, அங்கேயே உடனே அதனைப் பற்றித் திட்டினால் உடனடியாக லிச்சி ஜூஸ் உண்டு. அநீ ஸ்பான்ஸர்.

By Para

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me