இந்த அத்தியாயத்தில், சூனியன் தன்னை போலவே பாராவும் ஒரு திட்டத்தை வகுத்திருப்பானென முடிவு செய்கிறான்.ஆனால் தன்னுடைய திட்டம், பாராவின் திட்டத்தைவிட மேலானது என நினைத்துக் கொள்கிறான். ஓரளவுக்கு பாராவின் திட்டத்தைச் சூனியன் கண்டு கொண்டதாகவும் யூகித்து கொள்கிறான்.
சூனியன் வனத்தில் ஒரு தங்கத் தவளையைப் பிடித்துத் துணி மடிப்புக்குள் வைத்து, அவனின் படைப்புகளிடம் காட்டுகிறான். அதை எதற்குக் கொண்டு வந்தான் எனவும் விளக்குகிறான். தங்க தவளையின் அருகில் வெப்பத்தை அதிகரித்து அதன் வேர்வையை சேகரிக்கிறான். அதை ஆல கால விஷம் எனவும் அதை ஒரு அம்பில் தடவி, கோவிந்தசாமியின் நிழல்மீது செலுத்துவது என முடிவு செய்கிறான்.
அவனது படைப்புகள் அதிர்ந்து நிற்கும் நேரம், எதற்கு அந்த அம்பு என விவரிக்கிறான். முடிவாக அவனது நான்கு பெண் படைப்புகளும் அந்த அம்பை முத்தமிட்ட பின் நிழலின் மீது எய்ய படுகிறது.
அது சரியாக நிழலின் மீது துளைத்ததா? அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!