கோவிந்தசாமியின் நிழலும் சூனியனும் என்ன ஆனார்கள் என்பது தெரியாமல் நகரின் எல்லைக்குள் அமர்ந்திருந்த கோவிந்தசாமிக்கு பசி வந்துவிட்டது. பாவம் என்ன செய்வான்? எங்கேயாவது கடைகளில் டீ பானிபூரி தருகிறார்களா ?என்று தேடிப்பார்க்கிறான். மொழி தெரியாத ஊரில் என்னவென்று தேடுவது?யாரைக்கேட்பது? அவனுக்கு இந்தியின் நினைவு வருகையில் எனக்கு கோபம் வந்தது. அதற்கென அவனுக்கு ஒரு கதை வேறு இருந்தது.
ஒரு மாநாட்டில் அவன் தலைவன் ஒருவன் காலி நாற்காலிகளிடம் ஆவேசமாக உரையாற்றும் நிகழ்ச்சிக்கு சாகரிகாவை அழைத்து சென்றது நினைவு வந்தது. அங்கு அவன் தலைவன் உரக்க பேசி கண்ணீர் விட்டதை எண்ணிக்கொண்டான்.ஆனால் இந்தி தெரியாததால் கடைசிவரை அவன் என்ன பேசினான் என்று கோவிந்துக்கு புரியவில்லை. அதற்காக தன் வாழ்வின் லட்சியமாக இந்தி மொழியை எப்படியாவது கற்றுவிட வேண்டும் என்று எப்போதும் சொல்விக்கொண்டான்.
சாகரிகாவோடு தன் நினைவுகளை அலைய விட்டு பின் மீண்டும் நீல நகரத்தில் நின்றிருந்தான். அந்த நகரத்தில் தனக்கு உதவ யாராவது வருவார்களா என அவன் எதிர்பாத்தது போலவே ஒரு மனிதப்பெண் அங்கு வந்தாள். இவனை பற்றி முழுவதும் தெரிந்துக்கொண்டு உதவுவாள் என்று எதிர்பார்த்தால் அது தவறு. ஏனெனில் அவள் சாகரிகாவின் தோழி. சாகரிகா தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை கதையாக எழுதி ஊர் முழுவதும் பறைசாற்றிய விஷயம் தெரிந்து கோவிந்தசாமி அதிர்ச்சியாகிறான். நாமும்தான்.