கபடவேடதாரி – சாய் வைஷ்ணவி மதிப்புரை (அத்தியாயம் 7)

என்ன சொல்வது?அடடா!கற்பனை வானை பொத்துக்கொண்டு ஊற்றுகிறதே.நிச்சயம் இதுபோல் ஒரு கற்பனை புனைவு கதையை கேட்டிருக்கமாட்டோம். அந்தரங்கம் இல்லாத உலகம். ரகசியம் இல்லாத உலகம். நேற்றிரவு யார் யாரோடு இருந்தார்கள் என்பதை ஊர் மொத்தமும் தெரிந்து கொள்ளும். அதற்கென பிரத்யேகமான வெள்ளை போர்டு பொதுவெளியிலும் வீட்டிற்குள்ளும் வைத்திருக்கிறார்கள்.வீட்டில் நடப்பதை வீட்டிலிருக்கும் பலகையில் எழுதி விட வேண்டும். இன்னும் சொல்ல போனால் யாரும் அங்கு பேசிக்கொள்வதில்லை. சைகை மற்றும் பலகையில் எழுதுல்தான் கருத்து பரிமாற்றம் செய்யும் வழி. இப்படி ஒரு வசதி இங்கிருந்தால் பூமியே நிசப்தமாக இருக்குமல்லவா?சண்டை சச்சரவுகள் அரவே இராது.
சாகரிகாவை சமாதானம் செய்து எப்படியாவது தன்னுடன் அழைத்து செல்ல வேண்டுமென்பது கோவிந்தசாமியின் எண்ணம். ஆனால் சாகரிகா இந்த நீல நகரத்தில் பிரஜையாகி விட்டிருந்தாள். அவளுக்கு இவ்விடம் இன்பம். கோவிந்தசாமிக்கு அவமானம் ஒன்றும் புதிதல்ல. இம்முறையும் அவள் அதையே பரிசாக தந்து அவனை துரத்தி விடுகிறாள். இங்கு அவன் என்பது அவன் நிழல்.
வழக்கம் போல கோவிந்தசாமி குமுறி அழுகிறான். அவனுக்கு உதவுவதற்காக சூனியன் நீல நகர மொழி கற்க போய் சாகரிகாவை சந்தித்து விஷயங்களை தெரிந்து கொள்கிறான். இவ்விடத்தில் கற்பனை களஞ்சியம் விதைத்து ஓங்கி வளர்கிறது. ஆமாம் அந்த நகரின் அரசு யார் எதை விரும்பினாலும் உடனடியாக மனுவை படித்து நிறைவேற்றி விடுகிறது. ஆச்சரியம்தான்.அதன்படி மிக எளிமையாக விரைவாக சூனியன் அந்நகரப் பிரஜை ஆகிவிடுகிறான். அதற்கு ஒன்றும் பெரிதாக செய்து விடவேண்டாம். அவன் குறியை இரண்டாக வெட்டி இரண்டு கைகளில் பொருத்தி விடுவார்கள். அவ்வளவுதான். அவர்கள் அந்நாட்டின் பிரஜை. அவர்கள் மொழியும் அத்துப்படி. அவன் நேராக சாகரிகா எழுதிய பலகையை படித்து பார்த்தான். அதில் அவள் எழுதிய செய்தி தான் இந்த அத்தியாயத்தின் அழகு!
Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!