நீல வனத்தில் சமஸ்தானம் அமைப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் சாகரிகா செய்துகொண்டிருந்தாள். அந்த சமஸ்தானத்தின் ஒவ்வொரு பகுதியையும் அவள் பார்த்து பார்த்து செதுக்கிக் கொண்டிருந்தாள். அதற்கென பிரத்யேகமான ஆட்களை நியமித்து அவர்களை முடுக்கிவிட்டு கொண்டிருந்தாள். சமஸ்தானம் அவள் ரசிகர்களுக்காக ரசிகர்களே சேர்ந்து உருவாக்கியது போலவும் அதில் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லாதவாறு காட்டிக் கொள்வதாக ஏற்பாடு. ரசிகர்களின் பெயரில் அவள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.
நற்குணசீலன் கதாபாத்திரம் யாரைக் குறிக்கிறது என எனக்கு ஓரளவு புரிந்தாலும், நான் அதை வெளிப்படுத்த விரும்பவில்லை.
நிழலின் நிலையை அறியாமல் சாகரிகா இவற்றையெல்லாம் செய்துகொண்டிருக்க, நிழல் விலைபோய்விட்டதாகக் கூறுகிறாள். அவர்கள் வெண்பலகையை பார்ப்பதற்காக வன அலுவலகம் விரைகிறார்கள்.