படைப்பாளி எனும் பேசுபொருள் – கோபி சரபோஜி

வாசிக்க வாங்குனவனுக ஆட்டயப் போட்டுட்டு போயிட்டானுகன்னு புலம்பாமல் முதன் முதலில் வந்த பதிப்பு நுல்கள் தற்போதைய விலையை விட குறைவாக இருக்கும். அவைகளைத் தேடிப் பார்த்து வேண்டிய நூல்களை வாங்கிக் கொள்.பணம் நான் தருகிறேன்” என நண்பர் சொல்லியிருந்தார்.
கரும்பு தின்னக்கூலியா? என்றாலும் ஏண்டா இந்த உறுதி மொழியைக் கொடுத்தோம்? என அவன் நினைத்து விடவும் கூடாது என்பதால் பார்த்து விட்டு சொல்கிறேன் என சொல்லி வைத்திருந்தேன். பா.ரா. புத்தகங்களில் சிலவற்றை வாங்கிக் கொள்ளும் முடிவில் நேற்று வாரக் கடைசி என்பதால் நண்பரோடு வழக்கமாக புத்தகங்கள் வாங்கும் கடைக்கு சென்றிருந்தேன்.
நுழைந்ததும் முகப்பில் ”மாயவலை” வைத்திருந்தார்கள். அதைக் கையில் எடுத்ததும் அங்கிருந்த பையன் சார், ”பா.ரா. பார்க்குறீங்களா? ” என்றான். அந்தக் கடையில் பலமுறை நான் புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். ஒருமுறை கூட புத்தகங்களின் ஆசிரியர் பெயர் சொல்லி இப்படி அந்தக் கடை ஊழியர்கள் கேட்டதில்லை. நேற்று கேட்டதும் ஆச்சர்யமாக இருந்தது. சரி என்றதும் ஒரு புத்தக அடுக்குக்கு அழைத்துச் சென்றான்.
வரிசையாக பா.ரா.வின் புத்தகங்கள் இருந்தன. நான் நண்பரின் தயவில் வாங்க நினைத்திருந்த புத்தகங்களின் விலைப்பட்டியலை பார்த்தேன். இப்பொழுது ஜீரோ டிகிரி தருவதை விட அதிகமாக இருந்தது. விலைக் கழிவும் கடையில் தருவதில்லை என்பதால் புதிய பதிப்பை விட விலை கூடுதாலக இருக்கே? என்றேன்.
அதற்கு அந்தப் பையன் சொன்ன பதில் அபாரம். ”இப்போது இவர் தானே ஹாட் ” என்றான்.
நானும் விடவில்லை. ”அவர் ஹாட் என்பதற்கும், புத்தக விலைக்கும் என்னப்பா சம்பந்தம்?” என்றேன்.
மெலிதாக சிரித்தான்.
ஜீரோ டிகிரியில் வாங்கிக் கொள்ளலாம் என நினைத்து வெளியில் வந்தேன். நூலக அடுக்கின் மேல் வரிசையில் ”எக்ஸ்லண்ட்” புக் இருந்தது.
எப்பொழுதும் ஏதோ ஒன்றின் வழி தன்னை பேசு பொருளாக எழுத்தாளர்கள் தங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்பது எத்தனை உண்மை!
Share

Add comment

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter