கடற்கரையில் நடக்கும் மாநாட்டு விவரணக்குறிப்புகள் மிகச் சிறப்பு. வழக்கமாகவே உலகம்முழுக்க ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மாநாடுகள் இவ்வாறுதான் நடைபெறுகின்றன. இந்த அத்யாயத்தில் ‘தேசிய நீரோட்டம்’ என்ற சொல் எழுத்தாளரால் மிகப் பெருத்தமாகக் கையாளப்பட்டுள்ளது.
தன் முன்னாள் கணவரைப் பற்றி எழுதப்படும் கட்டுரைத்தொடரில் இடம்பெறும் அனைத்து நிகழ்வுகளும் வஞ்சம் நிறைந்தவை. வஞ்சத்திலிருந்தே தன்னுடைய முன்னாள் கணவரின் மீது தனக்குள்ள வெறுப்பினை வெளிப்படுத்த முடிகிறது. சினத்தை எழுதிக் கடத்தல் என்பது இதுதானோ!
அந்தக் கட்டுரைத் தொடர் முச்சந்தியில் ஊரே பார்க்கும்படி வெளியிடப்படுவதையும் தனக்குக் கிடைத்த மற்றொரு வெற்றியாகத்தான் அந்தப் பெண் கருதுகிறாள். அதை அறிந்ததும் கோவிந்சாமி படும் மனவேதனை நம்மையும் கலங்கச்செய்கிறது. அவதூறால் அடையும் மனவோட்டமும் இளிவரலும் சொல்லில் அடங்காதவை.
‘கபடவேடதாரி’ நாவலில் பல கபடவேடதாரிகள் கதைமாந்தர்களாக இடம்பெறுவது சிறப்பாகவே இருக்கிறது.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.