கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 19)

சென்ற அத்தியாயத்தில் திராவிடத்தை உயர்த்தினார் என்று மகிழ்ந்திருக்கும் வேளையிலே ஒரே போடாக போட்டுத் தாக்கி விட்டார் இந்த அத்தியாயத்தில். ஆனால் அங்கு பேசியது பா.ரா. இங்கு பழித்தது சூனியன்.
கண்ணதாசன் குறிப்பிடும் அந்த பகுத்தறிவாளர் யாரென்று ஊகிக்க முடிகிறது. ஆனால், செம்மொழிபிரியா???
அடுத்ததாக ஜிங்கோ பிலோபா மரம். உண்மையில் அப்படியொரு மரம் இருக்கிறதா? Google செய்து பார்க்க வேண்டும். இந்த மனிதருக்கு மட்டும் எப்படி இப்படிப்பட்ட தகவல்கள் எல்லாம் தெரிகின்றன. பல தருணங்களில் வியக்க வைக்கிறார்.
கோவிந்தசாமிக்கு அந்த மரத்தின் மகிமை தெரிந்து இலைகளைச் சாப்பிட்டாலும் மரம் தான் மொட்டையாகுமே தவிர அவன் மாற மாட்டான். உண்மை தான்.
நான்+தான் சேர்ந்து “நாந்தான்” என புணருமென்பதை இன்று தான் அறிந்தேன். கன்னிமாரா நூலகமா? கனிமாரா நூலகமா?
சூனியனின் ஆட்டத்தைப் பார்க்க சனி வரை பொறுத்திருக்க வேண்டும் இனி.
Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி