அனுபவம்

கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 22)

எளிய மனிதர்கள் நீல நகரத்தில் இருந்தாலும்கூட அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடிக்கொண்டே இருப்பார்கள் போல! கோவிந்தசாமியின் நிழல் தனக்கான அடிப்படை உரிமையைக் கோரி, யதார்த்தமாகவே கோஷமெழுப்புகிறது.
துணைதேடும் நிழலின் விருப்பம் நியாயமானதாகவே படுகிறது. சாகரிகா-கோவிந்தசாமி நிழல் இணைவுக்கு ஷில்பா எல்லாவகையிலும் உதவுவார் என்று நினைக்கிறேன். ஒருவழியாக சாகரிகாவின் வீட்டில் தங்குவதற்குக் கோவிந்தசாமியின் நிழலுக்கு இடம்கிடைத்துவிட்டது. ‘ஒட்டகத்துக்கு இடம்கொடுத்த கதை’தான் என் நினைவுக்கு வருகிறது.
ஷில்பாவின் செயல்பாடுகள் வாசகர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. இறுதியில் வரும் உண்டாட்டு உரையாடல்கள் பெருமகிழ்வைத் தருகின்றன. தன்னை ‘நவீனப் பெண்ணிய எழுத்தாளர்’ என்று மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார் எழுத்தாளர் உயர்திரு. பா. ராகவன் அவர்கள்.
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி