கபடவேடதாரி – சாய் வைஷ்ணவி மதிப்புரை (அத்தியாயம் 5)

கோவிந்தசாமியை மிகவும் பிடித்ததற்கு காரணம் அவன் சிறந்த மூடனாக இருந்தான். ஒரு மூடனால் சூனியனுக்கு என்ன நடந்துவிடப்போகிறது?நான்கு அத்தியாயங்களை கடந்து ஐந்தாம் அத்தியாயத்திற்குள் பிரவேசிக்கும் போது நாம் யாராக இருந்து இக்கதையை படிக்கப்போகிறோம் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். சூனியனா?கோவிந்தசாமியா?இப்போதைக்கு இருவருமே ஒன்றுதான். ஆனால் கோவிந்தசாமியாக இருப்பதில் ஒரு சிறு நன்மை இருக்கிறது அது நாம் எதையும் சுயமாக சிந்திக்க வேண்டிய தேவையில்லை. நமக்காக இன்னொருவர் சிந்தித்து கொள்வார் என்றால் அதைவிட வேறென்ன வேண்டும்?

நவநாகரீகத்தை கடந்து வேறொரு பரிணாமத்தை அடைந்திருக்கும் சாகரிகவுக்கும் ராமனுக்கு செங்கல் சுமக்கும் கடைமட்ட சங்கியான கோவிந்தசாமிக்கும் எத்தனை அடி ஏணி வைத்தாலும் எட்டாது என்பது தெரிந்தது. ஒரு சிறிய சண்டையில் அவள் இவனை நீங்கிச் செல்கிறாள். அவள் நீல நகரத்துக்கு தன் முன்னாள் காதலுடன் வந்திருப்பது கேள்வியுற்றுதான் கோவிந்தசாமி இங்கு வந்திருக்கிறான்.

கோவிந்தசாமியின் வம்ச வரலாற்றையும் அவன் மூதாதையர்களின் பெயர்களையும் கேட்டு தலைசுற்றி விழுந்தால் ஆச்சரியமில்லை. எத்தனை பெயர்களடா?அதில்தான் எத்தனை சாமிகளடா?

கோவிந்தசாமி ஒரு ஆகச்சிறந்த கணவனாக சாகரிகாவுடன் வாழ தன்னை சீர்படுத்திக் கொண்டாலும் அவன் எது நடக்கக்கூடாது என்று நினைத்தானோ அதுவே நடந்தது.

ஒருவழியாக சூனியன் கோவிந்தசாமியை நேரில் சந்தித்து இணக்கமாக பேசி அவனுக்கு உதவுவதாக ஒப்புக்கொள்கிறான்.சாகரிகாவை தேடி கோவிந்தசாமியின் நிழலோடு புறப்பட்டு நிற்கையில் கோலாகலமான மழையோடு நம் எதிர்பார்ப்பும் விறுவிறுப்பும் கொட்டித்தீர்க்கக் காத்திருக்கிறது.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி