கண்ணீரும் புன்னகையும்

இன்றைக்கு மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி அல்லது தமிழக முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்திருக்கிறார். ஈழத் தமிழர் படுகொலைக்கு எதிராக இங்கிருந்து வேறென்ன செய்ய முடியும்? மேடைப்பேச்சு, அறிக்கைப் புரட்சி, டிவி பேட்டிக்கு அடுத்தபடி இது. எனவே இன்று பஸ்கள் ஓடாது. கடைகள் இருக்காது. கலைஞர் டிவியில் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும். ஈழத்தில் போர் நின்றுவிடும்.

இதைவிட –த்தனமான அரசியல் நடத்த யாராலும் முடியாது. தமிழ்நாட்டு மக்களை முழு மாங்கா மடையர்கள் என்றே கலைஞர் முடிவு செய்து விட்டதைத்தான் அவரது சமீபத்திய செயல்பாடுகள் காட்டுகின்றன. சுயமரியாதை உள்ள தமிழ்நாட்டு மக்கள் இன்று பதினாறு மணிநேரம் வேலை பார்ப்பார்களேயானால் அதுவே அவருக்கு நாம் அளிக்கும் சரியான பதிலாக இருக்கும்.

*

திட்டமிட்டுப் பரப்பப்பட்டதா, தற்செயலா என்று தெரியவில்லை. நேற்று மதியம் முதல் வன்னிப் பகுதியில் நடைபெறும் தாக்குதல் தொடர்பாகப் பல நூதனமான வதந்திகள் உலவ ஆரம்பித்தன. இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர் குறித்து செய்திகள் வெளிவந்த சில நிமிடங்களுக்குள்ளாக பொட்டு அம்மான் பிடிபட்டார் என்று எனக்கொரு மின்னஞ்சல் வந்தது. மாலை என் பக்கத்து வீட்டுக்காரர் அவசரமாகக் கதவைத் தட்டி, பிரபாகரனைச் சுற்றி வளைத்துவிட்டார்களாமே என்று கேட்டார். போர்க்களத்தில் இருந்த அத்தனை மக்களும் வெளியேறிவிட்டார்கள், பிரபாகரனும் ஒரு சில வீரர்களும் மட்டும் தனியே மாட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் பிரபாகரன் தாய்லாந்துக்குத் தப்பித்துவிட்டார் என்றும் சம்பந்தமில்லாமல் வேறு வேறு தரப்புகளிலிருந்து வதந்திகள் புறப்பட்ட வண்ணம் இருந்தன.

எதையும் நிரூபித்துக்கொண்டிருக்கவோ, பதில் சொல்லிக்கொண்டிருக்கவோ அவசியமற்ற நெருக்கடி நிலை. உண்மையல்லாத எதுவும் அதிக சமயம் உயிர் வாழ்வதில்லை. இந்தச் சூழலிலும் விளையாடும் எண்ணம் எப்படிச் சிலருக்கு எழும் என்பதுதான் விளங்கவில்லை.

*

இலங்கை ராணுவச் செயலகம் வெளியிட்டுள்ள ஒளிப்படங்கள் சிலவற்றைக் கண்டேன். கூட்டம் கூட்டமாக மக்கள் வெளியேறும் காட்சியின் பின்னணியில் விரியும் செய்திகளுக்கு அப்பால் நிஜம் வேறெங்கோ ஒளிந்து கிடக்கிறது.  செய்யக்கூடியது ஒன்றுமில்லை. எதையும் விமரிசித்துக்கொண்டிருக்கவோ, நியாய அநியாயங்கள் குறித்து விவாதம் வளர்க்கவோ இது சூழலல்ல. ஒரு பக்கம் அனுதாபம் தெரிவித்துக்கொண்டு இன்னொரு பக்கம் வதந்தி வளர்த்துக்கொண்டிருப்பதைக் காட்டிலும் மூடிக்கொண்டு சும்மா இருக்க முடியுமானால் லட்சக்கணக்கானோர் நிம்மதியுறுவர்.

பி.கு:  ஒரு தகவல். குமுதத்தில் நான் எழுதிக்கொண்டிருந்த பிரபாகரன் குறித்த தொடரை ஆர்வமுடன் வாசித்துக்கொண்டிருந்த வாசகர்கள் மன்னிக்க. வரும் இதழில் வெளியாகும் அத்தியாயத்துடன் தொடரினை நிறுத்துகிறேன். அவசரமாக முடித்து அல்ல. அப்படியே பாதியில்.

Share

15 comments

  • Hello Para sir, is there any genuine reason for stopping the your “thodar” in the middle? Is it stopped because it is not appropriate to do this at this time? Just curious.

  • Mass People movement looks like watching National Geography Channel where Animals migrate from one place to another during season change.

    Disheartening to see all these. We are helpless. Shit of politicians and national media showing only SL Army side story and not ready to show or debate on this.

  • Sir,
    You are only person who gives the Tamil Elam information without any bias..If you too stop then we (Tamils) never get proper information.. You are great writer who writes past history in very intresting way…

    Now a days most of them is not intrested to know the history that is the main reason all these stupid politicion like MK and others are cheating us..

    It is your duty to give complete picture of Prabaharan by this thodar… Do you getting any threatning from Tamil nadu ruler?… At anycost dont stop your thodar..

    It is your duty…Please never ever escape from this..
    I am not that much age of you so i can’t comments/command..and this is my humble request… Please dont stop the thodar…

  • உங்க வீட்டுக்கு ஆட்டோ வர வைக்கணும்னு முடிவு பண்ணிட்டீங்க போல?

    வர வர நாட்டுல யாருக்கும் உயிர் பயம் இல்லாம போச்சு.

  • ராகவன் ஐயா,

    ”வல்வெட்டித்துறை வேலுப்பிள்ளை பிரபாகரன்” தொடரை நிறுத்துவது குறித்தான தங்களது முடிவிற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் (முழுதாக எழுதி) புத்தக வடிவில் வெளியிட்டால் அகமகிழ்ந்து வாங்கி வாசிப்போம்.

  • ஏங்க இந்த தீடீர் முடிபு? தயவு செய்து தொடருங்கள். குமுதத்தில் எழுதுவது பிரச்சனையெனில் உங்களது பிளாக்கில் தொடரை தொடருங்களேன்.

  • Sir,
    I can understand your feelings. As a writer how much you have been irritated by this type of cheap politics.

  • சாதி, இனம், மொழி, இறையாண்மை, தீமை, நன்மை இவை எல்லாம் கடந்து ஒரு உயிரின் வலி, வேதனை என்னவென்று புரிய தமிழனாகவோ, தொப்புள் கொடி உறவோ தேவையில்லை. நல்ல மனிதனாக இருந்தாலே போதும். அதை நீங்கள் அரசியல்வாதிகளிடம் எதிர்பார்ப்பது பேதமை. நீங்கள் நடுநிலைமையுடன் உங்கள் பணியைத் தொடருங்கள், // தன் வாரிசுகள் கஷ்டப்படுவார்களோ, யாதவ குலத்தினைப் போல் அடித்துக்கொண்டு வீணாய்ப் போவார்களோ என்கிற பெருங்கவலை // உங்கள் இந்த வாக்கு in Jokker சத்தியமாகப் போவது சர்வ நிச்சயம்.

  • Dear Ragavan,
    Your articles are impressive. Its your right to stop the serial in Kumudham. Atleast write on the problems faced by the Tamils who are caught in cross fire.Given the magnitude of what is happening in Srilanka, the silence of Indian Right wing media is inexcusable. Dont be a spectrum of Indian govt in spreading cynical political manipulation. The tamil media is doing the crime of being selectively targetting LTTE in the Lankan issue.
    Aren’t the images of Tamils infiltering from lanka disturbing?

  • திரு.பா.ராகவன் அவர்களுக்கு,

    49(ஓ) கட்சிக்காரன் எழுதிக்கொள்வது,
    முதலில் உங்கள் புளித்த பழம் (4-2-09) கட்டுரையிலிருந்து…….
    1) //நீ ஈழப் போராட்டத்தை ஆதரிக்கிறாயா, எதிர்க்கிறாயா என்பது இல்லை முக்கியம். மனச்சாட்சிப்படி எடுக்கிற நிலைபாடுகளை இதில்கூட ஒருவரால் மாற்றிக்கொள்ள இயலுமா என்பதுதான் என் வியப்பு. இந்த விஷயத்தில் நான் ஜெயலலிதாவை மதிக்கிறேன். ஹிந்து பத்திரிகையை மதிக்கிறேன். துக்ளக்கை மதிக்கிறேன். ராமதாஸ், வைகோ, திருமாவளவன் போன்ற அரசியல்வாதிகளை மதிக்கிறேன். தமது புத்திக்குச் சரியென்று தோன்றிய ஒரு முடிவை இன்றளவும் இவர்கள் மாற்றிக்கொள்ளவில்லை. தமிழக அரசியல் சார்ந்து ஆயிரம் முறை பல்டி அடிக்கக்கூடியவர்களே என்றாலும் ஈழப் பிரச்னை தொடர்பாகப் பால் மாறியதில்லை. கொண்ட கொள்கையில் உறுதி காக்கக்கூடியவர்களாகவே இன்றுவரை இருக்கிறார்கள்//.

    2) //எனக்கு எக்காலத்திலும் கட்சி சார்புகள் இருந்தது கிடையாது. பிரச்னைகளின் அடிப்படையில், வேட்பாளர்களின் தகுதி அடிப்படையில் மட்டுமே ஒவ்வொரு தேர்தலிலும் இதுநாள் வரை வோட்டுப் போட்டு வந்திருக்கிறேன். வாழ்விலேயே முதல் முறையாக, தி.மு.க. சார்ந்த எந்த வேட்பாளருக்கும் இனி வோட்டுப் போடக்கூடாது என்று இன்று தோன்றியது.என்னைப்போல் வேறு பலருக்கும் தோன்றியிருக்கக் கூடும்.//

    3) //வாழ்ந்து பார்த்தாலொழிய வாழ்க்கையில்லை. அடிபட்டாலொழிய வலியில்லை. இந்தளவில், நாம் செய்யக்கூடிய மாபெரும் உபகாரம் வாயை மூடிக்கொண்டு சும்மா இருப்பது மட்டுமே. அதையாவது கலைஞர் செய்திருக்கலாம்.//

    கண்ணீரும் புன்னகையும் கட்டுரையிலிருந்து….
    4) // –த்தனமான //

    5) //பி.கு: ஒரு தகவல். குமுதத்தில் நான் எழுதிக்கொண்டிருந்த பிரபாகரன் குறித்த தொடரை ஆர்வமுடன் வாசித்துக்கொண்டிருந்த வாசகர்கள் மன்னிக்க. வரும் இதழில் வெளியாகும் அத்தியாயத்துடன் தொடரினை நிறுத்துகிறேன். அவசரமாக முடித்து அல்ல. அப்படியே பாதியில்.//

    1A. இன்றும் (29-4-09) நீங்கள் கொள்கை அடிப்படையில் ஜெயலலிதாவை மதிக்கிறீர்களா?? இலங்கை பிரச்சனையை தேர்தல் பிரச்சனையாக மாற்றிய அரசியல் சூத்ரதாரி ஜெயலலிதாவை கொள்கை அடிப்படையில் தமிழக மக்கள் எப்படி மதிப்பது? தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் கூட்டணிக்கு “கொள்கை குலவிளக்கு” ஜெயலலிதா ஆதரவளித்தால், (யூகத்திற்கு காரணம் ராமதாஸின் “3மாதத்தில் சட்டமன்ற தேர்தல்” பேச்சு) என்ன செய்வது?? கொள்கைக்காக மக்கள் அவருடைய கூட்டணிக்கு போட்ட ஓட்டு என்ன ஆகும்?? தேர்தலிக்கு பின்னால் ஜெயலலிதாவிற்கு செலக்டீவ் அமினீஷியா வந்தால் என்ன செய்வது?(அது அவருக்கும் வரும்.. பிறருக்கும் வரவழைப்பார்).

    2A. சினிமா தியேட்டரில் வெள்ளிக்கிழமை படத்தை மாற்றுவது போல் அமைச்சர்களை மாற்றும் அதிரடி (கோமாளித்தனமான) நடவடிக்கையை மாநில அரசியல் வேண்டுமானால் சகித்துக்கொள்ளுமே தவிர அத்தகைய நடவடிக்கை மத்திய அரசியலுக்கு அத்தனை சுகப்படாது…. இரு கூட்டணிகளை ஒப்பிடுகையில்… தி.மு.க கூட்டணி என்னும் யானை தின்னும் கவளச்சோற்றின் பருக்கையாவது மக்களுக்கு கிடைக்கும்.

    3A. நீங்கள் சொல்வது போல் அவர் வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம், தேர்தல்’09 சதுரங்கர ஆட்டத்தில் அவர் ஆடிய தவறான ஆட்டம் இது. தேரை இழுத்து தெருவில் விடுவது என்பார்களே அது போல ஆகிவிட்டது கருணாநிதி என்னும் தேரின் நெலமை. தேரை லாவகமாக முன்னின்று இழுத்து தெருவிற்கு வரவழைத்தவர்கள் ராமதாஸ் – ஜெயலலிதா, “பின்னால் இருந்து தள்ளியவர்” திருமாவளவன் (ஆண்டாள் கோவில் தேரை பின்னால் இருந்து புல்டோசர் தள்ளுவது போல). திருமங்கலம் தேர்தலுக்கு பின்னர் இந்த மூவர் அணியின் தேர்தல்’09 சதுரங்கர ஆட்டம் மிக அற்புதமாக இருந்தது/இருக்கிறது. திருமாவளவனை கூட்டணியில் தக்க வைப்பதன் மூலம் இலங்கை பிரச்சனையை தவிர்க்கலாம் என கருணாநிதி தப்புக்கணக்கு போட்டு விட்டார் அவர் ஒரு புரூட்டோஸ் என்பதை மறந்து.

    4A. இத்தகைய வார்த்தை பிரயோகம் உங்களைப்போன்ற பெரிய எழுத்தாளர்களிடம் இருந்து வருவதை எங்களால் செரித்துக்கொள்ள முடியவில்லை.

    5A. மிகக் குறைந்த இடைவெளியில் அடுத்தடுத்து (ஜோக்கர், கண்ணீரும்-புண்ணகையும்) இரண்டு கட்டுரைகளை நீங்கள் எழுத வேண்டிய அவசியம் என்ன? இலங்கை தமிழர்களின் மீது கொண்ட அக்கரையா? இல்லை.. குமுதத்தில் தொடர் நிறுத்தப்பட்டதால் வந்த கோபமா? இவ்விரண்டு கட்டுரையின் மூலம் உங்களுள் எழுந்த கோபத்திற்கு வடிகால் ஏற்படுத்திக்கொண்டுள்ளீர்கள் என்று தான் நினைக்கத்தோன்றுகிறது.
    ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்த போது இந்த ஜோக்கர் கட்டுரை எழுதியிருந்தீர்கள் என்றால் உங்கள் நடுநிலைமையின் மீது நம்பகத்தன்மை வந்திருக்கும். நடுநிலை தவறி ஒரு அரசியல் கட்டுரை எழுதுவதை விட எழுதாமல் இருப்பதே உங்களை நேசிக்கும் வாசகர்களுக்கு நீங்கள் செய்யும் உபகாரமாக இருக்கும்.

    ஆட்டோ உங்க வீட்டுக்கு வந்ததா? இல்லை குமுதம் அலுவலகத்துக்கு வந்ததா?
    எது எப்படியோ ஒரு அரிய தொடர் (தினசரி 6மணி நேர உழைப்பென்றால் சும்மாவா) பாதியில் நின்று போனது மிக வருத்தமாய் உள்ளது… இத்தொடர் தேர்தலுக்கு பின்னர் தொடரும் என எதிபார்ப்பது பேராசை, ஏனென்றால் இத்தகைய நல்ல தொடர்கள் குமுதத்தில் வருவதே அபூர்வம்….ம்ஹூம்….. உங்கள் வலைப்பூவில் மீதியை தொடருமாறு வேண்டிக்கொள்கிறேன்.

    தமிழக அரசியல் குட்டையில் ஊறிய இன்னொறு மட்டையான ஜெயலலிதாவின் செய்கைகளையும் நீங்கள் விமர்சிக்காததால் என்னுள் எழுந்த கோபத்தின் வடிகாலே இந்த பின்னூட்டம்.

    தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் மக்களின் தேவை வளர்ச்சி பணிகள் மட்டுமே !!!! ஈழப் போராட்டத்தை ஆதரிக்கிறோமா, எதிர்க்கிறோமா என்பது இல்லை.
    ஆகவே எஞ்சிய இரண்டு ஆண்டுகளில் ராமதாஸல் தடைபட்ட விமான நிலைய விரிவாக்கம் (பெங்களூர் எலகங்கா விமான நிலையத்தை பார்த்த எவரும் ராமதாஸுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள்) உள்ளிட்ட வளர்ச்சிப்பணிகளை தி.மு.க அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும்.

    – காத்தவராயன்

  • I feel the serial on Prabhakaran was started at a wrong time and has already created ripples in Tamil Nadu. And secondly the fact is that the subject is not a person worth writing about!!

  • தொடரை நிறுத்துவது தான் ஏனென்றே யூகிக்க முடியவில்லை //// ??????

    சினிமாவில் நிறைய கமிட் ஆகி விட்டீர்களா..??

  • Hello sir

    How are u

    I am visiting your site after a long time.are u thro with “sugam brahmasmi “.If so please let me know where do i find them.

    Rgds

    sampath

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!