அனுபவம்

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 9)

இந்த அத்தியாயத்தில் சில திருப்பங்கள் இருக்கின்றன. இதுவரை சூனியன் மூலமாக சொல்லப்பட்ட கதையை இன்னொருவர் தொடரப்போவதாக சூனியன் சொல்கிறான். அவன் சொல்வதைப் பார்த்தால் கதையின் ஒரு குறிப்பிட்ட பகுதி இன்னொருவரால் சொல்லப்படும்போல் தெரிகிறது. அந்த இன்னொருவர் யார் என்பது சஸ்பென்ஸ்.
அந்த குறிப்பிட்ட பகுதியை அந்த இன்னொருவர் சொல்வதற்கு முன்னர் அந்த சம்மந்தப்பட்ட நபரே அதை சொன்னால் எப்படி இருக்கும்? அதுவும் நடக்கிறது.
கோவிந்தசாமி ஒரு சராசரி மனிதன். அவன் மனைவி அப்படியல்ல. அவனது பிற்போக்குத்தனங்களை எல்லாம் போகிற போக்கில் எள்ளி நகைக்கிறாள். அவனை திருத்த அவள் முயல்வதில்லை என்றாலும் அவளை எப்படியாவது மாற்றிவிட முனைகிறான் அவன்.
அவன் அவளைப்பிரிந்து சிலநாட்கள் செல்ல, அவள் வேறொரு திட்டம் போடுகிறாள். கதையில் ஒரு சினிமா நடிகரும் ஒரு அரசியல்வாதியும் வருகிறார்கள்.
மிகைப்படுத்தல் எதுவுமின்றி கொஞ்சம் இயல்பாகவே செல்லும் இந்த அத்தியாயம், அடுத்தடுத்த அத்தியாயங்களில் வரும் கதை சொல்லல் உத்திகளால் சுவாரஸ்யம் கூடப்போவதை உணர்த்திவிட்டு போகிறது.
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி